கடந்த ஆண்டில், கொரோனா தாக்கத்தினால், மருத்துவ காப்பீடு கோரல்களின் எண்ணிக்கை, 257 சதவீதம் அதிகரித்துள்ளதாக, ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. தனியார் பொது காப்பீட்டு துறையை சேர்ந்த, ‘டிஜிட்’ காப்பீடு, அந்நிறுவன தரவுகளின் அடிப்படையிலான ஆய்வறிக்கையில் பல தகவல்களை தெரிவித்துள்ளது.
மருத்துவ காப்பீடு (Medical Insurance)
மருத்துவ காப்பீடு கோரல்களின் எண்ணிக்கை, 2021ம் ஆண்டில், 3.5 மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டில் ஏற்பட்ட முதல் அலையால் மக்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டதை விட, 2021ல், ‘டெல்டா’ பாதிப்பினால் அதிகம் பேர் அனுமதிக்கப் பட்டனர். இதனால், 2020ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2021ல், கோரல்களின் எண்ணிக்கை 257 சதவீதம் உயர்ந்துள்ளது.
மேலும், 2021ல், மெட்ரோ அல்லாத பகுதிகளில் பதிவான கோரல்களின் எண்ணிக்கை, 17 சதவீதம் உயர்ந்துள்ளது. இது, மெட்ரோ அல்லாத பகுதிககளிலும் மருத்துவ காப்பீடு எடுத்துக் கொள்வது அவசியம் என்பதை உணர்த்துவதாக இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க