வாடிக்கையாளர்களின் உச்சகட்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் புத்தம் புதிய ராயல் என்பீல்டு பைக் ஒன்று நாளை அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
ராயல் என்ஃபீல்டு (Royal Enfield)
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள பைக்குகளில் ஒன்று ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 (Royal Enfield Super Meteor 650). இந்த பைக் இந்திய சாலைகளில் நீண்ட காலமாக சோதனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று (நவம்பர் 8) அறிமுகம் செய்யப்படவுள்ளது.
இத்தாலியின் மிலன் நகரில் நடைபெறும் எக்மா ஷோ-வில் (EICMA Show) சூப்பர் மீட்டியோர் 650 பைக்கை நாளை அறிமுகம் செய்யவுள்ளதாக ராயல் என்பீல்டு நிறுவனம் அறிவித்துள்ளது. அதற்கு முன்னதாக சூப்பர் மீட்டியோர் 650 பைக்கின் டீசர்களை ராயல் என்பீல்டு நிறுவனம் தற்போது தொடர்ச்சியாக வெளியிட்டு கொண்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னதாகதான் சூப்பர் மீட்டியோர் 650 பைக்கின் அதிகாரப்பூர்வமான முதல் டீசரை ராயல் என்பீல்டு நிறுவனம் வெளியிட்டிருந்தது. இந்த வரிசையில் மீண்டும் ஒரு முறை சூப்பர் மீட்டியோர் 650 பைக்கின் டீசர் ஒன்றை ராயல் என்பீல்டு தற்போது வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படத்தில், சூப்பர் மீட்டியோர் 650 பைக்கின் பின் பகுதியை நம்மால் தெளிவாக பார்க்க முடிகிறது.
புதிய ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக்கில் எல்இடி டெயில் லேம்ப் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விற்பனையில் உள்ள ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 (Royal Enfield Meteor 350) பைக்கிலும் இந்த எல்இடி டெயில்லேம்ப்பை நம்மால் பார்க்க முடியும். அதே நேரத்தில் ட்வின் எக்ஸாஸ்ட் அமைப்பு மற்றும் ஸ்பிளிட் சீட் ஆகியவற்றையும் ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக் பெற்றுள்ளது.
முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் நாளில்தான், ராயல் என்பீல்டு நிறுவனம் விலை எவ்வளவு? என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும். அனேகமாக நடப்பு 2022ம் ஆண்டு முடிவதற்குள்ளாகவோ அல்லது 2023ம் ஆண்டின் தொடக்கத்திலோ ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக் முறைப்படி சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க
தகுதியில்லாத ரேஷன் கார்டுகள் ரத்து: மத்திய அரசு அதிரடி நடவடிக்கை!
500 ரூபாயில் 5 லட்சம் லாபம் தரும் திட்டம் பற்றி தெரியுமா உங்களுக்கு?