ஆன்ட்ராய்டு அலைபேசி பயன்படுத்துபவர்கள் புதிய வகை மால்வேர் தாக்குதலுக்கு ஆளாகலாம், என மத்திய அரசின் கணினி தொடர்பான நெருக்கடி மேலாண்மை குழு எச்சரித்துள்ளது.
புதிய வகை வைரஸ்
டிரிங்க் என்ற புதிய வகை வைரஸ், ஆன்ட்ராய்டு அலைபேசிகளில் ஊடுருவி வங்கி விபரங்களை திருடுவதாகவும், குறிப்பாக 27 இந்திய வங்கிகளின் வாடிக்கையாளர்களை குறி வைத்து இத்தாக்குதல் நடத்தப்படுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலி குறுஞ்செய்தி
வருமான வரித்துறை அனுப்புவது போல் போலி குறுஞ்செய்தி (Message) அனுப்பி அதன் வாயிலாக அலைபேசிக்குள் ஹேக்கர்கள் ஊடுருவுகின்றனர். குறுஞ்செய்தியில் உள்ள இணையதள முகவரிக்குள் நுழைந்த பின் டவுன்லோடு ஆகும் ஆப், அலைபேசியின் எஸ்.எம்.எஸ்., கால் விபரங்களை கண்காணிக்க தொடங்கும்.
பின்னர் படிப்படியாக ஆதார் எண் (Aadhar Card Number), டெபிட் கார்டு (Debit Card) விபரங்கள் உள்ளிட்ட வங்கி தொடர்பான விபரங்கள் திருடப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
குரல் வழியாக பரிவர்த்தனை: ரிசர்வ் வங்கி அனுமதி!
BYJU'S நிறுவனத்தின் அசத்தல் திட்டம்: குழந்தைகளுக்கு இலவச கல்வி!