Others

Sunday, 02 January 2022 06:06 AM , by: R. Balakrishnan

LPG Gas Price Reduced

ஆங்கிலம் புத்தாண்டை முன்னிட்டு இந்தியன் ஆயில் நிறுவனம் மக்களுக்கு ஒரு பெரிய பரிசை வழங்கியுள்ளது. வர்த்தக ரீதியிலான எல்பிஜி சிலிண்டரின் விலையை 100 ரூபாய் குறைக்க இந்தியன் ஆயில் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதனால் மக்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது. இருப்பினும், வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர் (LPG Cylinder) விலையில் எந்த மாற்றமும் இல்லை.

விலை குறைப்பு (Cylinder Rate Reduced)

வணிக ரீதியிலான எல்பிஜி சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது
முன்னதாக டிசம்பர் மாதத்தில், வணிக ரீதியான எல்பிஜி (Commercial Gas Cylinder) சிலிண்டர்களின் விலை உயர்த்தப்பட்டது. டிசம்பரில் எல்பிஜி சிலிண்டர் (LPG Gas Cylinder) விலை ரூ.100 உயர்த்தப்பட்டது. தற்போது வணிக சிலிண்டரின் விலை குறைப்பால் உணவக உரிமையாளர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

கமர்ஷியல் எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு
டெல்லியில் தற்போது 19 கிலோ வணிக எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.2001 ஆக மாற்றப்பட்டுள்ளது. அதே நேரத்தில், கொல்கத்தாவில் வணிக ரீதியான எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.2077 ஆக உள்ளது. மும்பையில் 19 கிலோ வர்த்தக எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.1951 ஆக உள்ளது.

மானியம் (Subsidy)

வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர் மானியம் (lpg gas subsidy) இல்லாத 14.2 எவ்வித மாற்றமும் இல்லை. இம்முறையும் வீட்டு சிலிண்டர் விலையில் எவ்வித மாற்றம் இல்லை. கடந்த அக்டோபர் மாதம் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்களின் விலை உயர்த்தப்பட்டது. டெல்லி மற்றும் மும்பையில் மானியம் (LPG Gas Subsidy) இல்லாத 14.2 கிலோ வீட்டு எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.899.50 ஆகும். அதே நேரத்தில், கொல்கத்தாவில் இதன் விலை ரூ.926, சென்னையில் ரூ.915.50க்கு 14.2 கிலோ எல்பிஜி சிலிண்டர் விற்கப்படுகிறது.

மேலும் படிக்க

வந்தாச்சு சலுகை விலையில் ஆவின் பால் அட்டை: தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!

மழையில் சம்பா பயிர்கள் பாதிப்பு: காப்பீட்டுத் தொகை வழங்க விவசாயிகள் கோரிக்கை!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)