நம் வங்கிக்கணக்கில் உள்ள பணத்தைத் தேவையின்போது, எடுத்துக்கொள்வது வழக்கம். அதற்காகவே நாம் வங்கிக்கணக்கு வைத்திருக்கிறோம். ஆனால் உங்கள் வங்கிக்கணக்கில் பணம் இல்லாவிட்டாலும், அதாவது 0 பேலன்ஸாக இருந்தாலும் கூட நீங்கள் பணம் எடுத்துக்கொள்ள முடியும். அதுவும்ரூ. 500 ரோ, ரூ1000மோ அல்ல ரூ.10000. நம்ப முடியவில்லையா? உண்மை அதுதான். அதற்காகத்தான், பிரதமர் ஜன் தன் யோஜனா திட்டத்தில் சூப்பர் வசதி உள்ளது.
பிரதமர் ஜன் தன் யோஜனா (Jan Dhan Yojana) என்பது இருப்புத் தொகை தேவையில்லாத ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட் (Zero Balance Account) ஆகும். ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் தொடங்கப்படும் கணக்குகளின் என்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்துகொண்டே வருகிறது.
ஜன் தன் யோஜனா கணக்கில் ஓவர்டிராஃப்ட் (Overdraft) வசதியின் கீழ் பணம் இல்லாமலேயே 10,000 ரூபாய் வரை பணம் பெற்றுக்கொள்ளலாம். இதுமட்டுமல்லாமல் உங்களுக்கு ரூபே கார்டு (Rupay Card) வழங்கப்படும். அதன் மூலம் ஏடிஎம்மில் பணம் எடுப்பது, ஷாப்பிங் போன்றவற்றுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.
ஓவர்டிராஃப்ட், ஏடிஎம் கார்டு மட்டுமல்லாமல் 2 லட்சம் ரூபாய் விபத்துக் காப்பீடு வசதியும் ஜன் தன் கணக்கில் கிடைக்கிறது. எந்தவொரு வங்கியிலும் ஜன் தன் கணக்கு தொடங்கலாம். இந்தக் கணக்கிற்கு மினிமம் பேலன்ஸ் எனப்படும் குறைந்தபட்ச இருப்புத் தொகை தேவையில்லை என்பதை நாம் தெரிந்து வைத்துக்கொள்வது முக்கியம்.
மேலும் படிக்க...
பிளாஸ்டிக் கவரில் ஊற்றிக் கொடுக்கும் சூடான உணவை சாப்பிடலாமா?
பழங்களின் தோல்களை வீசாதீர்கள்- இத்தனை ஊட்டச்சுத்துகள் இருக்கு!