
அஞ்சலகச் சேமிப்புத் திட்டங்களுக்கு வட்டித் தொகை செலுத்தப்படாது என இந்திய தபால் துறை தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், இந்தத் தொகை, வாடிக்கையாளர்களின் வங்கிக்கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், வங்கிக்கணக்கு குறித்த தகவல்களை அளிக்காத வாடிக்கையாளர்களுக்கு சிக்கல் எழுந்துள்ளது.
கிராமப்புற மக்களின் நம்பிக்கை நட்சத்திரம் என்றால் அவை அஞ்சல் அலுவலகங்கள்தான். அதனால்தான் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள், அஞ்சலச் சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்துள்ளனர்.
ரிஸ்க் இல்லாத முதலீடு, நல்ல வட்டி வருமானம் என தபால் அலுவலக திட்டங்கள் தனித்துவம் வாய்ந்தவை. இதனால் கிராமப்புறங்களிலும் தபால் அலுவலக திட்டங்கள் ஊடுருவியுள்ளன.
இந்நிலையில், ஏப்ரல் 1ஆம் தேதி முதல் சீனியர் சிட்டிசன் சேமிப்புத் திட்டம் (Senior Citizen Savings Scheme), மாத வருமானத் திட்டம் (Monthly Income Scheme), டெபாசிட் திட்டங்களுக்கு தபால் அலுவலகம் வட்டித் தொகையை செலுத்தாது என தபால் துறை வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளது.
அதேநேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சித் தகவலையும் வெளியிட்டுள்ளது. இதன்படி இனி வட்டித் தொகை வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கிற்கே நேரடியாக செலுத்தப்படும். வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கு இணைக்கப்படாமல் இருந்தால் தபால் அலுவலகம் வாயிலாகவோம், காசோலை மூலமாகவோ வட்டித் தொகை செலுத்தப்படும்.
குறிப்பாக சீனியர் சிட்டிசன் சேமிப்பு திட்டம், மாத வருமான திட்டம், டெபாசிட் ஆகியவற்றில் முதலீடு செய்தவர்கள் பலர் வட்டித் தொகை பெறுவதற்கு இன்னும் வங்கி சேமிப்புக் கணக்கை இணைக்காமலேயே இருப்பதாக தபால் துறை சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்தவர்கள் பலரும் வட்டித் தொகை கிடைப்பது கூட தெரியாமல் இருப்பதாக தபால் துறை தெரிவித்துள்ளது. எனவே, தபால் அலுவலக திட்டங்களில் முதலீடு செய்வோர் வட்டித் தொகை பெறுவதற்கு வங்கிக் கணக்கை இணைக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
4 பிரீமியம் செலுத்தினாலே போதும்- ரூ.1 கோடி கிடைக்கும்வரை!
கொரோனாவால் அதிகரித்த ஆண்மைக் குறைபாடு பிரச்னை - ஆய்வில் தகவல்!