Others

Wednesday, 30 March 2022 10:02 AM , by: Elavarse Sivakumar

வீட்டிற்குப் பயன்படுத்தும் சமையல் சிலிண்டர் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், விரைவில் சிலிண்டர் விநியோகத்தை நிறுத்த மத்திய அரசுத்திட்டமிட்டுள்ளது.

மக்களின் நிதிச்சுமையைக் கருத்தில்கொண்டு இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிகிறது. சரி சிலிண்டர் இல்லாமல் என்ன செய்வது? மறுபடியும் கரி அடுப்பா? என்ற சந்தேகங்கள் எழுகிறதல்லவா? கவலை வேண்டாம். அப்படியொரு நிலைமை நமக்கு இல்லை.சிலிண்டருக்குப் பதிலாக பைப் (Pipe gas)மூலம் எரிவாயு விநியோகிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு, நாம் தற்போது பயன்படுத்தும் மின்சாரத்திற்கு ஏற்றவாறு, கட்டணம் செலுத்துவதைப் போல, பைப் எரிவாயுவிற்கும் கட்டணம் வசூலிக்கப்படுமாம்.

சமையலுக்கு பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டர் நாடு முழுவதும் அத்தியாவசியத் தேவையாகிவிட்டது. வீடுகளிலும், வணிக ரீதியாக நிறுவனங்களிலும் கேஸ் சிலிண்டர்கள் இன்றியமையாத தேவையாக உள்ளது. ஒவ்வொரு முறை சிலிண்டர் விலை உயரும்போதும் கடும் நெருக்கடி ஏற்படுகிறது.

இந்நிலையில், நாடு முழுவதும் பைப் மூலம் எரிவாயு விநியோகம் செய்வதற்கான மெகா திட்டத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இதுகுறித்தத் தகவலை நாடாளுமன்றத்தில் பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி வெளியிட்டார்.

இதன்படி, நாடு முழுவதும் சிலிண்டருக்கு பதிலாக பைப் மூலம் கேஸ் விநியோகிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக இந்தியாவில் 82% நிலப்பரப்புக்கு பைப் மூலம் கேஸ் விநியோகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மக்கள் தொகை அடிப்படையில் இந்தியாவில் 98% மக்களுக்கு பைப் மூலம் கேஸ் விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான விரிவாக்கப் பணிகள் வரும் மே 12ஆம் தேதி முதல் தொடங்கவிருக்கிறது. உள்கட்டமைப்புக்கான செயல்திட்டம் இனி உருவாக்கப்படும்.

இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளுக்கு பைப் மூலம் கேஸ் விநியோகிக்கப்படும். தொலைதூரப் பகுதிகள், மலைப் பகுதிகள் போன்ற இடங்களுக்கு மட்டும் பைப் மூலம் கேஸ் விநியோகிக்கப்படாது. சிலிண்டரை காட்டிலும் பைப் மூலம் விநியோகிக்கப்படும் எரிவாயு விலை குறைவானது மட்டுமல்லாமல், எளிதாக பயன்படுத்தக்கூடியதாகும்.

மேலும் படிக்க...

இல்லத்தரசிகளுக்கு 3 சமையல் சிலிண்டர்கள் இலவசம்- மாநில அரசு முடிவு!

அழகை என்றும் தக்கவைக்க- இவற்றுக்கு 'உ ஊ' சொல்லுங்க!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)