மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 28 February, 2022 4:44 PM IST
Nominee Appointment When Buying a New Vehicle

தமிழகத்தில் இனி புதிதாக வாங்கும் வாகனங்களுக்கு 'நாமினி'யை நியமிக்கும் வகையில், போக்குவரத்துத் துறையின் மென்பொருளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மூன்று கோடிக்கும் அதிகமான வாகனங்கள் வலம் வருகின்றன. ஆண்டுக்கு 60 ஆயிரத்துக்கும் அதிகமான விபத்துக்கள் நடக்கின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தான், கொரோனா ஊரடங்கு காரணமாக விபத்து மரணம் 10 ஆயிரத்துக்கும் கீழே குறைந்துள்ளது. அதற்கு முன் 2016 ஆம் ஆண்டில் அதிகபட்சமாக 17 ஆயிரத்து 218 பேர், விபத்துக்களில் உயிரிழந்திருந்தனர். அதன்பின், 16 ஆயிரம், 12 ஆயிரம் என குறைந்து, கடந்த 2020ல் 8060 என்ற அளவில் இருந்தது.

வாகனங்களுக்கு நாமினி (Nominee for Vehicles)

விபத்துக்களில் உயிரிழந்த பலருடைய குடும்பங்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் காப்பீடு கிடைக்கவில்லை என்பது பொதுவான புகாராக உள்ளது. இறந்தவர்களின் பெயர்களில் இருந்த வாகனங்களைப் பெயர் மாற்றம் செய்யாமல் பயன் படுத்துவதும், இதற்கு முக்கியக் காரணமாக உள்ளது. ஆர்.சி., யில் 'நாமினி 'ஆர்.சி.புத்தகத்தில் பெயர் மாற்றம் செய்யப்படாமலே, பல்லாயிரக்கணக்கான வாகனங்கள், சாலைகளில் இயக்கப்படுகின்றன. இதனால் பலவிதமான பிரச்னைகள் ஏற்படுகின்றன.

தனிநபரின் பெயரிலுள்ள சொத்துக்கள், வங்கி முதலீடு காப்பீடு, மியூச்சுவல் பண்ட், பங்குச்சந்தை பங்குகள், அரசு டெபாஸிட்கள் போன்றவை, அவர் இறந்தபின் அவருடைய 'நாமினி'க்குக் கிடைத்து விடுகிறது. வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களில் 'நாமினி' நியமிக்கப்படும் முறை இருப்பதால் இது சுலபமாகிறது. ஆனால் வாகனங்களுக்கு 'நாமினி' நியமிக்கும் வாய்ப்பில்லாமல் இருந்தது. இதனால் ஏற்படும் பிரச்னைகளைக் கருத்தில் கொண்டு, கடந்த 2020 ஆம் ஆண்டில், மத்திய அரசு முக்கிய சட்டத்திருத்தம் கொண்டு வந்தது.

சட்டத்திருத்தம் (Amendment)

மோட்டார் வாகனச்சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து, அதற்கான அறிவிக்கையை (Notification GSR 739 (E) Date: 26-11-2020) வெளியிட்டது. ஆனால் அதற்குப் பின்னும் தமிழகத்தில் 'நாமினி' நியமிப்பதற்கான நடவடிக்கைகளை, தமிழக போக்குவரத்துத்துறை எடுக்காமல் இருந்தது. இந்த சட்டத்திருத்தத்துக்காக சட்டரீதியாகப் போராடி வந்த கோயம்புத்துார் கன்ஸ்யூமர் காஸ் அமைப்பு, இதுகுறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் சில தகவல்களைக் கோரியது.

அதற்குப் பின்பே, தமிழக அரசின் போக்குவரத்துத்துறை சுதாரிப்படைந்து, புதிய வாகனங்களுக்கான ஆர்.சி.புத்தகத்தில் 'நாமினி' பெயரைச் சேர்க்கும் வகையில், மென்பொருளில் மாற்றத்தைச் செய்துள்ளது. இதனால், டீலர்களிடம் புதிதாக 'புக்கிங்' செய்யப்படும் வாகனங்களுக்கு படிவம் 20 ல் 'நாமினி' பெயர் மற்றும் உறவுமுறை போன்றவற்றைக் குறிப்பிடும் வகையில், கூடுதல் விபரங்கள் கோரப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களாக, இந்த விபரங்களுடனே டீலர்களிடமிருந்து ஆர்.டி.ஓ., ஆபீசுக்கு விபரங்கள் அனுப்பப்படுகின்றன. அதனால் ஆர்.சி. புத்தகத்திலும் 'நாமினி' பெயர் சேர்க்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. ஆனால், பழைய வாகனங்களுக்கு, 'நாமினி'யை நியமிப்பதற்கு, சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்படவில்லை.

இதன் காரணமாக, ஏற்கனவே, நாடு முழுவதும் இயங்கி வரும் 25 கோடிக்கும் அதிகமான வாகனங்களுக்கு, 'நாமினி'யை நியமிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்த வேண்டுமென்று, பல்வேறு நுகர்வோர் அமைப்புகளும் கோரிக்கை விடுத்து வருகின்றன. அதையும் செய்தால் மட்டுமே, இந்த சட்டத்திருத்தம் கொண்டு வந்ததன் நோக்கம் முழுதாக நிறைவேறும்.

மேலும் படிக்க

சுற்றுச்சூழலுக்கு ஏற்ற உராய்வில்லாத மோட்டார் தயார்!

கேன் குடிநீர் தரமாக இல்லையா?புகார் அளிக்க இந்த எண்ணைத் தொடர்பு கொள்ளுங்கள்!

English Summary: Nominee Appointment When Buying a New Vehicle: New Amendment!
Published on: 28 February 2022, 04:44 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now