அசைவ உணவுகளில் நம் உடலுக்கு அதிகம் ஆரோக்கியம் தரும் உணவு என்றால் அவை கடல் சார்ந்த உணவுகள்தான். அதனால்தான் அயல் நாடுகளைப் பொறுத்தவரை, கடல் உணவுகளுக்கெனவே உணவுப் பிரியர்கள் காத்திருக்கிறார்கள். அவ்வாறு ஆசை ஆசையாக மீன் சாப்பிட நினைத்த ஒருவருக்கு மிகப் பெரிய அதிர்ச்சி ஏற்பட்டது.
இது குறித்த வீடியோ இன்ஸ்டாகிராமில் @rhmsuwaidi என்ற கணக்கின் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவில், மீன் பிரியர் ஒருவர் உணவகத்தில் ஆர்டர் செய்கிறார். இதையடுத்து அவருக்கு காய்கறிகள், கண்ணாடி நூடுல்ஸ் மற்றும் இரண்டு மீன்களுடன் மீன் சார்ந்த உணவைக் பரிமாறப்படுகிறது.
ஆனால் அந்த மீன்கள் உயிருடன் உள்ளது.
உணவை உண்பவர் ஒரு குச்சியால் மீனைக் குத்தியவுடன், மீன் வாயைத் திறந்து குச்சியின் நுனியைப் பிடிக்கிறது. மீனின் வாயில் சிறிய கூர்மையான பற்களை நீங்கள் காணலாம். இந்த வீடியோ 1 லட்சத்துக்கும் அதிகமான லைக்குகளை குவித்துள்ளது.
இந்த வீடியோ ஜப்பான் அல்லது , சீனாவில் எடுக்கபட்டிருக்கலாம். ஏனெனில், அங்குதான் இதுபோன்ற உயிருள்ள உயிரின உணவுகள் விரும்பிக் கேட்கும் வாடிக்கையாளர்களுக்குப் பரிமாறப்படுகிறது.
மேலும் படிக்க...
கோடை வெப்பத்தைத் தகிக்க வைக்கும் தயிர்- எந்த நேரத்தில் சாப்பிடலாம்?
புற்றுநோய், சுகர் என பல நோய்க்குத் தீர்வு வேண்டுமா? இந்த ஒரு இலையே போதும்!