Others

Sunday, 29 October 2023 04:38 PM , by: Muthukrishnan Murugan

Bank holiday

பொது மக்களின் வாழ்வில் வங்கிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ள, டிமாண்ட் டிராஃப்ட் பெறுதல் மற்றும் காசோலைகளை டெபாசிட் செய்தல் போன்ற பல செயல்பாடுகளுக்காக ஏராளமானோர் தினமும் வங்கிக்கு வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் நவம்பர் மாதத்திற்கான வங்கி விடுமுறைப் பட்டியலை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. விடுமுறைக்கிணங்க பொதுமக்கள் தங்களது பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். நவம்பர் 2023 இல் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் உட்பட திருவிழாக்கள், ஆண்டு விழாக்கள் மற்றும் பிற நிகழ்வுகள் என மொத்தம் 15 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வங்கி விடுமுறை நாட்களின் பட்டியல் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும். (மாநிலங்களின் முக்கிய நிகழ்வுகள், திருவிழாக்கள் ஏற்ப)

  • நவம்பர் 5: ஞாயிறு
  • நவம்பர் 11 : இரண்டாவது சனிக்கிழமை
  • நவம்பர் 12: ஞாயிறு
  • நவம்பர் 19 : ஞாயிறு
  • நவம்பர் 25: நான்காவது சனிக்கிழமை
  • நவம்பர் 26: ஞாயிறு
  • நவம்பர் 1 (புதன்கிழமை)- கன்னட ராஜ்யோத்சவா/கர்வா சௌத்: கர்நாடகா, மணிப்பூர், இமாச்சல பிரதேசத்தில் உள்ள வங்கிகள் மூடப்படும்
  • நவம்பர் 10 (வெள்ளிக்கிழமை)- வாங்கலா திருவிழா. மேகாலயாவில் வங்கிகள் மூடப்படும்.
  • நவம்பர் 13 (திங்கட்கிழமை)- கோவர்தன் பூஜை/லக்ஷ்மி பூஜை (தீபாவளி)/தீபாவளி: திரிபுரா, உத்தரகாண்ட், சிக்கிம், மணிப்பூர், ராஜஸ்தான், உத்தரபிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் வங்கிகள் மூடப்படும்.
  • நவம்பர் 14 (செவ்வாய்)- தீபாவளி (பாலி பிரதிபதா)/தீபாவளி/விக்ரம் சம்வந்த் மற்றும் புத்தாண்டு தினம்/லட்சுமி பூஜை- குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, சிக்கிம்.
  • நவம்பர் 15 (புதன்கிழமை)- (பைடூஜ்/சித்ரகுப்த் ஜெயந்தி/லக்ஷ்மி பூஜை (தீபாவளி)/நிங்கோல் சக்கௌபா/பிராத்ரித்விதியா). சிக்கிம், மணிப்பூர், உத்தரப் பிரதேசம், வங்காளம், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலுள்ள வங்கிகள் மூடப்படும்.
  • நவம்பர் 20 (திங்கட்கிழமை) - சாத் (காலை அர்க்யா). பீகார் மற்றும் ராஜஸ்தானில் வங்கிகள் மூடப்படும்.
  • நவம்பர் 23 (செவ்வாய்)- செங் குட்ஸ்னெம்/எகாஸ்-பாக்வால். உத்தரகாண்ட் மற்றும் சிக்கிமில் வங்கிகள் மூடப்படும்.
  • நவம்பர் 27 (திங்கட்கிழமை)- குருநானக் ஜெயந்தி/கார்த்திகா பூர்ணிமா/ரஹஸ் பூர்ணிமா. திரிபுரா, மிசோரம், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ஒரிசா, சண்டிகர், உத்தரகாண்ட், ஹைதராபாத் - தெலுங்கானா, ராஜஸ்தான், ஜம்மு, உத்தரப் பிரதேசம், வங்காளம், மகாராஷ்டிரா, புதுதில்லி, பீகார், ஜார்கண்ட், ஹிமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வங்கிகள் மூடப்படும்.
  • நவம்பர் 30 (வியாழன்)- கனகதாச ஜெயந்தி. கர்நாடகாவில் வங்கிகள் மூடப்படும்.

மேற்குறிப்பிட்டுள்ள நாட்களில் அந்தந்த மாநிலங்களில் உள்ள வங்கிகள் விடுமுறையினை முன்னிட்டு மூடப்பட்டிருக்கும் என்பதால், பொதுமக்கள் அதற்கேற்ப திட்டமிட்டு வங்கி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். தங்களது பணப் பரிவர்த்தனைகளை மொபைல் அல்லது நெட் பேங்கிங் மூலம் மேற்கொள்ளலாம். கூடுதலாக, பணம் எடுக்க, நீங்கள் ஏ.டி.எம். போன்றவற்றை பயன்படுத்துவதன் மூலம், வங்கி விடுமுறை நாட்களிலும் உங்கள் வங்கிச் செயல்பாடுகளைச் சீராகத் தொடரலாம்.

இதையும் காண்க:

அடிச்சு வெளுக்கப் போகுது- 16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

கயிலாங்க் கடை பொருட்கள் மூலம் காரை உருவாக்கிய இயற்கை விவசாயி

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)