Others

Thursday, 14 July 2022 07:08 AM , by: Elavarse Sivakumar

கால்நடை மருத்துவ பயிற்சி ஊழியர்களுக்கும் இனிமேல் அகவிலைப்படி வழங்கப்படும் என மாநில அரசு தெரிவித்துள்ளது. அரசின் இந்த அறிவிப்பு மருத்துவப் பயிற்சி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தானில், அரசு மருத்துவ மற்றும் ஆயுர்வேத பயிற்சி ஊழியர்களை போலவே கால்நடை மருத்துவ பயிற்சி ஊழியர்களுக்கும் அகவிலைப்படி வழங்குவதற்கு ராஜஸ்தான் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் அவர்கள் நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.

கூடுதல் சலுகைகள்

இதன்படி, ஏப்ரல் 1ஆம் தேதி முதல் மருத்துவ, ஆயுர்வேத, கால்நடை மருத்துவ பயிற்சி ஊழியர்களுக்கு அகவிலைப்படியும், உதவித் தொகையும் வழங்கப்படும் என ராஜஸ்தான் அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒப்புதல்

இதற்கான முன்மொழிதலுக்கு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ஒப்புதல் அளித்துள்ளார். இதுவரையில் மருத்துவ மற்றும் ஆயுர்வேத பயிற்சி ஊழியர்களுக்கு மட்டுமே அகவிலைப்படியும், உதவித் தொகையும் வழங்கப்பட்டு வந்தது.

ரூ.14,000

இந்நிலையில், கால்நடை மருத்துவ பயிற்சி ஊழியர்களுக்கும் அகவிலைப்படி, உதவித் தொகை வழங்கப்படும் என ராஜஸ்தான் அரசு அறிவித்துள்ளது. இதன்படி, கால்நடை மருத்துவ பயிற்சி ஊழியர்களுக்கு 3500 முதல் 14000 ரூபாய் வரை உதவித் தொகை வழங்கப்படும்.

மேலும் படிக்க...

காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை!

மனைவியை ஏமாற்ற பாஸ்போர்ட் கிழிப்பு - கைது செய்த போலீஸார்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)