பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 9 February, 2022 7:57 AM IST

சூதாட்டம் என்பது, எல்லாக் காலத்திலும், சமுதாயத்தைக் குல நாசம் செய்யக்கூடியது. அந்த வகையில் சாதாரண மனிதர்களாக இருந்தாலும் சரி, கடவுளுக்குத் தன்மை அர்ப்பணித்தவர்களானாலும் சரி, அடிமையாகிவிட்டால், எவரானாலும், முடிவு நாசம்தான். இதற்கு நல்ல  உதாரணம்தான், கேரளாவில் நடந்துள்ள சம்பவம்.

பள்ளியின் நிதியில் இருந்து, சுமார் 5 கோடி ரூபாயைச் சுருட்டிய கன்னியாஸ்திரி சூதாட்டத்திற்கும், பயன்படுத்தியது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த கன்னியாஸ்திரி மேரி மார்கரெட் க்ரூப்பர் . 80 வயதான இவர், லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தில் உள்ள ரோமன் கத்தோலிக் தொடக்கப் பள்ளியில் முதல்வராக பணியாற்றி வந்தார்.

சூதாட்டத்திற்கு அடிமை

சுமார் அறுபது ஆண்டு காலமாக தனது ஆசிரியர் பணியை மேற்கொண்டு வந்த க்ரூப்பர் திடீரெனச் சூதாட்டத்திற்கு அடிமையாகியிருக்கிறார். சூதாட்டம் விளையாட அதிகளவில் பணம் தேவைப்பட்டதால், அவரது மனது மாறியது. பள்ளி நிதியில் கைவைக்க க்ரூப்பர் முடிவு செய்துள்ளார். அதன்படி, பள்ளிக்கு செலுத்தப்படும் கல்விக் கட்டணம், நன்கொடைகள் உள்ளிட்டவையை க்ரூப்பர் தனது கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் ரகசிய வங்கி கணக்கிற்கு அனுப்பி வந்துள்ளார்.


இவ்வாறாக, சுமார் 5.97 கோடி ரூபாயை சுருட்டி சூதாட்டத்திற்கும், ஆடம்பரமான சுற்றுலாப் பயணங்களுக்கும் பயன்படுத்தியிருக்கிறார் இந்தத் துறவி. திடீரென சந்தேகம் அடைந்தப் பள்ளி நிர்வாகத்தினர் சோதனையில் ஈடுபட்டனர். இதுகுறித்து முன்னதாக தெரிந்துக்கொண்ட க்ரூப்பர் சம்பந்தப்பட்ட ஆவணங்களை அழித்துவிடுமாறும் ஊழியர்களிடம் கூறியது விசாரணையில் அம்பலமானது.

கம்பி எண்ணுகிறார்

பின்னர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்ட க்ரூப்பர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். நீதிமன்ற விசரணையின் இறுதி முடிவில் க்ரூப்பருக்கு ஓராண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளதால், அவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.உன்னதமான ஆசிரியர் பணியைச் செய்து, ஆயிரக்கணக்கான மாணவர்களை உருவாக்கிய துறவி, தன்னுடைய மனம்போன போக்கில் போனதால்தான் தற்போது கம்பி எண்ணுகிறார்.

மேலும் படிக்க...

இனிமேல் வார சம்பளம்! ஊழியர்களுக்கு உச்சக்கட்ட மகிழ்ச்சி!!

அச்சதலான 10 அடி தோசை - சாப்பிட்டால் ரூ.71,000 பரிசு!

English Summary: Nun looted Rs 5 crore from gambling-school fund
Published on: 08 February 2022, 10:05 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now