Others

Friday, 04 November 2022 06:28 PM , by: T. Vigneshwaran

Ola Scooter

சிறந்த பட்ஜெட்டிற்குள் EV ஸ்கூட்டர் வாங்க நினைக்கும் மக்களை இலக்காகக் கொண்டு, எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான ஓலா எலெக்ட்ரிக் தனது புதிய S1 Air எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை சமீபத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது.

இதன் மூலம் தனது இ-ஸ்கூட்டர் போர்ட்ஃபோலியோவையும் விரிவுபடுத்தியுள்ளது. ஒருமுறை முழுவதுமாக சார்ஜ் செய்தால் சுமார் 100 கிமீ வரை செல்லும் இந்த புதிய Ola S1 Air எலெக்ட்ரிக் ஸ்கூட்டர், இந்திய இ-ஸ்கூட்டர் செக்மென்ட்டில் ஒரு கேம் சேஞ்சராக இருக்கும் என்று ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் CEO பவிஷ் அகர்வால் கூறி இருக்கிறார்.

தீபாவளிக்கு முன் ரூ.79,999 என்ற அறிமுக விலையில் வெளியிடப்பட்ட இந்த புதிய Ola S1 Air எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் தற்போதைய எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.84,999 ஆகும். ரூ.79,999 என்ற அறிமுக விலை அக்டோபர் 24, 2022 வரை செய்யப்பட்ட முன்பதிவுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும். Ola S1 Air-க்கான பர்ச்சேஸ் விண்டோ பிப்ரவரி 2023 -ல் திறக்கப்படும், டெலிவரிகள் 2023 ஏப்ரல் மாதத்தில் தொடங்கும். தற்போது வாடிக்கையாளர்கள் ரூ.999 செலுத்தி இந்த ஸ்கூட்டரை ரிசர்வ் செய்து கொள்ளலாம். S1 மற்றும் S1 Pro ஸ்கூட்டர்களை விட மலிவு விலையில் வழங்குவதால் பிற ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஹை-ஸ்பெக் வேரியன்ட்களுடன் ஒப்பிடுகையில் Ola S1 Air சில விஷயங்கள் இருக்காது.

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் புதிய S1 Air ஸ்கூட்டரானது S1 பிளாட்ஃபார்ம் அடிப்படையிலானது. இது 4.5 kW ஹப் மோட்டாரை உள்ளடக்கியிருக்கும், இது மணிக்கு 85 கிமீ வேகத்தை அடைய உதவும். நிறுவனத்தின் கூற்றுப்படி, eco மோடில் இதன் அதிகபட்ச வரம்பு 100 கிலோ மீ ட்டர் ஆகும். சுமார் 99 கிலோ எடை கொண்ட இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நியோ மின்ட், கோரல் கிளாம், ஜெட் பிளாக், போர்சிலியன் ஒயிட் மற்றும் லிக்விட் சில்வர் உள்ளிட்ட கலர் ஆப்ஷன்களில் வெளிவர உள்ளது.

டிசைன்

இதன் சைட்களில் கீழ் பகுதியை நோக்கி பிளாக்-அவுட் பேனல்களைப் பெறுகிறது. மேலும், இருக்கை மாற்றப்பட்டு, வழக்கமான தோற்றமுடைய டியூபுலர் கிராப் ரெயில்ஸை கொண்டுள்ளது. S1 மற்றும் S1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் கர்வ்டு ஃப்ளோர்போர்டை போலல்லாமல், இந்த புதிய ஸ்கூட்டர் பிளாட் ஃப்ளோர்போர்டாக உள்ளது. இந்த ஸ்கூட்டர் 7-இன்ச் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளேவை பெறுகிறது.

மேலும் படிக்க:

பித்ரு தோஷம் நீங்க தஞ்சாவூரில் வழிபட வேண்டிய கோவில்

அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி வகுப்பு

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)