தங்களது மாநிலத்தில் பழைய பென்சன் திட்டம் அமல்படுத்தப்படுவதாக இந்த மாநில அரசு அறிவித்துள்ளது. அரசின் இந்த அறிவிப்பு அம்மாநில அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பழைய ஓய்வூதியத் திட்டம்
அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்பது என ராஜஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. இதனால் அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வந்துள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த ராஜஸ்தான் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
விதிகளில் திருத்தம்
இதற்காக, ராஜஸ்தான் சிவில் சர்வீசஸ் பங்களிப்பு ஓய்வூதிய விதி (2005) ரத்து செய்யப்பட்டுள்ளது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிகளை மாற்றி அம்மாநில நிதித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
யாருக்கு கிடைக்கும்?
இந்த முடிவின்படி, 2004ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி மற்றும் அதற்குப் பிறகு அரசுப் பணியில் சேர்ந்த ஊழியர்கள், ஓய்வு பெற்றவுடன் பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பென்சன் பெற தகுதியுடையவர்கள் ஆவர். இதன்படி, 2022 மார்ச் 31க்கு முன் பணியில் இருந்து வெளியேறிய ஊழியர்களுக்கும் இந்த ஆண்டு ஏப்ரல் முதல் இந்த விதியின்படி ஓய்வூதியப் பலன்கள் வழங்கப்படும்.
50% பென்சன்
ராஜஸ்தான் மாநில அரசு, பணி ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு சம்பளத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாக வழங்கும் விதியை சட்டப்பூர்வமாக அமல்படுத்தியுள்ளது. அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் பழைய ஓய்வூதியத்தை மீண்டும் அமல்படுத்துவதாக அறிவித்தார். அதன் பிறகு தேசிய பென்சன் திட்டத்துக்கான ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் ஏப்ரல் 1 முதல் நிறுத்தப்பட்டுள்ளது.
ஜாக்பாட்
2004 ஏப்ரல் 1க்குப் பிறகு ராஜஸ்தான் மாநிலத்தில் அரசுப் பணியில் சேர்ந்த ஊழியர்கள் புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் எடுக்கப்பட்டனர். இப்போது ராஜஸ்தான் அரசு ஏப்ரல் 1 முதல் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து 10 சதவிகித அடிப்படைப் பிடித்தத்தை நிறுத்தியுள்ளது. புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து சுமார் 39000 கோடி ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க...
ரூ.1லட்சம் பென்சன் தரும் மத்திய அரசின் மகத்தானத் திட்டம்!
நீரிழிவு நோயை தடுக்கும் பழைய சோறு - யாரும் அறிந்திராத உண்மை!