பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 26 January, 2022 8:58 PM IST

வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக்கணக்கில் கையிருப்பில் உள்ளத் தொகை எவ்வளவு, கடைசிப் பணப்பரிமாற்றம் உள்ளிட்டவை குறித்துத் தொலைப்பேசி மூலம் அறிந்துகொள்ளும் வசதியை SBI அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் கையிருப்பு குறித்த விபரத்தை அறிய உங்கள் போனில் இணையவசதி இருக்கவேண்டிய அவசியமும் இல்லை.

இலவச எண் (Free number)

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களுக்கு வங்கி சேவைகளை மேம்படுத்த முயற்சித்து வருகிறது. இந்த வரிசையில், எஸ்பிஐ (SBI Bnak)1800 1234 என்ற இலவச எண்ணை வழங்கியுள்ளது, இதில் நீங்கள் வீட்டில் இருந்தபடியே பல்வேறு வசதிகளைப் பெறலாம்.

அனைத்து வேலைகளும் ஒரு எண்ணில் இருந்து செய்யப்படும்
இந்த இலவச எண்ணை அழைத்தால், உங்கள் வங்கி இருப்பு மற்றும் கடந்த கால பரிவர்த்தனை விவரங்களைப் பெறலாம். அதாவது, இந்த ஒரு எண்ணில் இருந்து உங்கள் கணக்கு தொடர்பான அனைத்து தகவல்களையும் பெற முடியும். இந்த வசதியைப் பயன்படுத்திக்கொள்ள உங்கள் போனில் இணையதளவசதி இருக்க வேண்டிய அவசியமும் இல்லை.

புதிய வசதி (New facility)

கொரோனா போன்று வைரஸ் தொற்று அதிகம் உள்ள நாட்களில் தங்கள் வாடிக்கையாளர்கள் வீட்டிலேயே பாதுகாப்ப இருக்க வேண்டும் என்பதைக் கருத்தில்கொண்டு இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக SBI தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளது.

வாடிக்கையாளர்களே, வீட்டிலேயே இருங்கள், பாதுகாப்பாக இருங்கள் என்ற அடிப்படையில், உங்கள் உடனடி வங்கித் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவும் தொடர்பு இல்லாத சேவையை SBI வழங்குகிறது. எங்கள் இலவச எண்ணை 1800 1234க்கு அழைக்கவும்' என்று தெரிவித்துள்ளது.

சேவைகள் (Services)

  • எஸ்பிஐயின் இந்த இலவச எண் மூலம் உங்கள் வங்கி (SBI Bnak) இருப்பைச் சரிபார்க்கலாம்.

  • இந்த இலவச எண்ணை அழைப்பதன் மூலம், உங்களின் கடைசி ஐந்து பரிவர்த்தனைகள் பற்றிய தகவல்களைப் பெறலாம்.

  • எஸ்பிஐயின் இலவச எண்ணான 1800 1234க்கு மெசேஜ் செய்வதன் மூலம் உங்கள் வங்கி இருப்பு மற்றும் கடைசி ஐந்து பரிவர்த்தனைகள் பற்றிய தகவலையும் பெறலாம்.

  • இந்த இலவச எண்ணில் உங்கள் ஏடிஎம் கார்டைத் தடுக்கலாம்.

  • இந்த இலவச எண்ணைத் தொடர்பு கொண்டு ஏடிஎம் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்.

  • இந்த இலவச எண் மூலம், வீட்டில் இருந்தபடியே உங்கள் ஏடிஎம் கார்டின் பின் எண்ணை (Pin Number) உருவாக்கலாம்.

  • இந்தக் கட்டணமில்லா எண்ணில் இருந்து உங்கள் ஏடிஎம் கார்டை (ATM Card) முடக்கிய பிறகு புதிய கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்.

  • இந்த வசதிகளை இந்த கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொண்டும் பெறலாம், அல்லது குறுஞ்செய்தி அனுப்பியும் பெறலாம்.

மேலும் படிக்க...

குளிருக்காகப் பற்ற வைத்தஅடுப்பு- பறிபோன 5 உயிர்கள்!

கண்ணத்தில் அறைந்த மணமகன்- கல்யாணத்தை நிறுத்திய மணமகள்

English Summary: One call is enough to know about bank balance- SBI's new facility!
Published on: 25 January 2022, 11:06 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now