பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 6 June, 2022 10:33 AM IST

நாடு முழுவதும் 1.56 லட்சம் தபால் நிலையங்கள் செயல்பட்டாலும், புதிய தபால் நிலையங்களின் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது.
அந்த வகையில்,குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்கும் எண்ணம் உங்களுக்கு இருந்தால், தபால் துறை உங்களுக்கு அரிய வாய்ப்பை அளிக்கிறது. கிராம மற்றும் நகர்புறங்களில் தபால் நிலையத்தின் கிளைகளை நீங்கள் தொடங்க முடியும்.

அஞ்சல்துறை வழங்கும் இந்த ஃபிரான்ச்சைஸ் ஸ்கீம் இரு வகை உரிமைகளை வழங்குகிறது.

  • தபால் சேவைகளை வழங்குவதற்கான நிலையம் அமைக்கும் உரிமை.

  • அஞ்சல் முகவர் உரிமை. வீடு வீடாக அஞ்சல் முத்திரைகள் மற்றும்

  • எழுதுபொருட்களை வழங்கும் முகவர்கள் இந்த உரிமையை பெறலாம்.

முதலீடு

இந்த உரிமைகளைப்பெற ரூ.5000 பாதுகாப்புக் கட்டணத்தை செலுத்த வேண்டும்.

தகுதி

  • இந்த இரண்டு உரிமைகளையும் பெற நீங்கள் 18 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

  • 8-ம் வகுப்பு தேச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • இந்திய குடியுரிமை பெற்றிருக்க வேண்டும்.

  • தபால் அலுவலக உரிமையை பெறுவதன் மூலம் நீங்கள் கமிஷன் முறையில் வருமானம் ஈட்டலாம்.

கூடுதல் கமிஷன்

மாதத்திற்கு ஆயிரத்திற்கும் மேலாக நீங்கள் பதிவுசெய்யப்பட்ட மற்றும் அதிவேக தபால்கள் புக் செய்யும் இலக்கை அடைந்தால் கூடுதலாக 20% கமிஷனை பெற முடியும். தபால்தலை மற்றும் அஞ்சல் தொடர்பான பொருட்களை விற்பனை செய்வதன் மூலம் 5 % கமிஷனை ஈட்ட முடியும்.

கமிஷன்

மாத வியாபாரத் தொகை அதிவேக தபால் கமிஷன் பதிவு செய்யப்பட்ட தபால் கமிஷன்
ரூ. 5 லட்சம் வரை 10 % 7%
ரூ. 5 லட்சம் முதல் 25 லட்சம் வரை 15% 10%
ரூ. 25 லட்சம் முதல் ரூ. 1 கோடி வரை 20% 13%
ரூ. 1 கோடி முதல் ரூ.5 கோடி வரை 25% 16%
ரூ.5 கோடிக்கு மேல் 30% 20%

விண்ணப்பிப்பது எப்படி?

தபால் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும். வியாபார திட்டத்தை விவரிக்கும் தகவல்களை இத்துடன் இணைக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் நபர் தபால் துறையுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் சம்பர்பிக்கபட்ட 14 நாட்களுக்குள் தகுதியான நபர்கள் குறிப்பிட்ட மண்டலத் தலைவர்களால் தேர்வு செய்யப்படுவர்.

மேலும் படிக்க...

ஐஸ் வாட்டர் Vs மண்பானைத் தண்ணீர், எதில் பக்கவிளைவுகள்?

ரூ.1லட்சம் பென்சன் தரும் மத்திய அரசின் மகத்தானத் திட்டம்!

English Summary: Opportunity to become a postal agent with an investment of Rs.5000!
Published on: 06 June 2022, 10:33 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now