இத்தாலி நாட்டின் ரோம் நகரில் இருந்து 70 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் சிறிய நகரம் மென்சா. இந்த நகரத்துக்கு புத்துயிரூட்டும் வகையில் மேயர் கிளாடியோ ஸ்பெர்ட்டி முக்கிய அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளார். அதாவது இங்குள்ள வீடுகள் ஒரு யூரோவிற்கு விற்பனைக்கு வந்துள்ளது. இந்திய மதிப்பில் வெறும் 87 ரூபாய் என்பது ஆச்சரியமானவை. அதுமட்டும் இல்லாமல் மென்சாவில் இருக்கும் வீடுகளை வாங்குவோர் அவற்றை புதுப்பித்துக் கொள்ள வேண்டுமாம்.
புதுப்பிப்பது அவசியம்(Renovation Needs To Be Done)
இதற்காக 5 ஆயிரம் யூரோ அதாவது ரூ.4.35 லட்சம் கேரண்டி டெபாசிட் தொகை வழங்க வேண்டும். புதுப்பிக்கும் பணிகள் நிறைவடைந்த உடன், இந்தப் ரொக்கம் திரும்ப அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது. வீடுகள் வாங்கிய மூன்று ஆண்டுகளுக்குள் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாங்கும் வீடுகளை எவ்வாறு பயன்படுத்தப் போகிறோம் என்பது பற்றிய விரிவான திட்டத்தையும் சமர்பிக்க வேண்டும்.
யாருக்கு முக்கியத்துவம் வழங்கப்படும்?(Who will be given prominence?)
அதாவது வீடாகவோ, உணவகமாகவோ, கடையாகவோ, பிரேக்பாஸ்ட் ப்ளேஸ் போன்று எதற்காக பயன்படுத்துகிறோம் என்று அவசியம் தெரிவிக்க வேண்டும். இதே கிராமத்தில் குடிபெயரும் நபர்களுக்கும், வீடுகளை விரைவாக புதுப்பிக்கும் நபர்களுக்கும் அதிக முக்கியத்துவம் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. வீடுகள் வாங்குவதற்கான விண்ணப்பங்கள் வரும் 28ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
நோக்கம்(Motive)
இப்போது, சில வீடுகள் மட்டுமே விற்பனைக்கு வந்துள்ளன. வரும் நாட்களில் காலியாக இருக்கும் வீடுகள் விற்பனைக்கு வரும் என்று மேயர் கிளாடியோ ஸ்பெர்ட்டி தெரிவித்துள்ளார். இவ்வளவு குறைந்த விலைக்கு வீடுகள் விற்கப்படுவதற்கு முக்கியமான பின்னணி காரணம் என்னவென்று பார்க்கலாம்.
அதாவது 1968ஆம் ஆண்டு பெலிஸ் பள்ளத்தாக்கு பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு பிறகு, மென்சோ நகரில் இருந்து பெரும்பாலான மக்கள் வெளியேறினர். இதன் காரணமாக அந்நகரின் மக்கள்தொகை பெரிதும் குறைந்துள்ளது. இந்த சூழலில் நகருக்கு மீண்டும் உயிர் கொடுக்கும் வகையில் தான் இத்தகைய நடவடிக்கை முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:
அக்டோபர் 1 முதல் வேலை நேரம் மாறுமா? புதிய தொழிலாளர் சட்டம் அமல்!
மீன் வளர்ப்பு: ஆண்டுக்கு ரூ. 25,000 முதலீடு ! ரூ .2 லட்சம் வருமானம்