நாங்கள் குறிப்பிடும் கிராமத்தில், ஒரு யூரோ அதாவது 85 ரூபாய்க்கு வீடு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இங்கு வீடு வாங்குவது அவ்வளவு எளிதல்ல. என்னவென்றுத் தெரிந்துகொள்ளத் தொடர்ந்து படியுங்கள்.இத்தாலி நாட்டில் ஒரு கிராமத்தில் வெறும் இந்த அதிசய வீடு விற்பனை செய்யப்படுகிறது.
கொரோனா பரவல் காரணமாக உலகம் முழுவதும் ரியல் எஸ்டேட் முற்றிலும் சரிந்து விட்டது. பணப் புழக்கம் இல்லாததால் மக்கள் எல்லோரும் வீடு, நிலம் வாங்கும் எண்ணத்தைக் கைவிட்டுவிட்டு உயிருடன் இருந்தால் போதும் என்ற எண்ணத்திற்கு வந்துவிட்டனர். இதனால் வீடுகளில் விலைகள் எல்லாம் தாறுமாறாகக் குறைந்தது. கொரோனா காலத்திற்கு முன்னர் விற்ற விலையை விடப் பாதி விலைக்கு தற்போது வீடு மற்றும் நிலங்கள் உலகில் பல இடங்களில் விற்பனையாகின்றன.
அரசின் புதியத் திட்டம்
இந்நிலையில் இத்தாலியின் சிசிலி என்ற நகரில் உள்ள முச்ஸோமேலி என்ற கிராமத்தில் அந்நாட்டு அரசு ஒரு வித்தியாசமான திட்டத்தைக் கொண்டு வந்தது. அந்த கிராமத்தில் உள்ள மக்களால் கைவிடப்பட்டுப் பராமரிப்பில்லாமல் இருக்கும் பகுதியில் உள்ள வீடுகளை வெறும் 1 யூரோ அதாவது இந்திய மதிப்பில் ரூ85க்கு விற்பனை செய்கின்றனர்.
நிபந்தனை
ஆனால் இந்த வீட்டை வாங்குபவர்களுக்கு ஒரு நிபந்தனை . அந்த வீட்டை அவர்கள் வாங்கி 3 ஆண்டுகளுக்குள் புரனமைக்க வேண்டும். அப்படி புரனமைக்காவிட்டால் வீட்டை மீண்டும் அரசே எடுத்துக்கொள்ளும் என நிபந்தனை இருந்தது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டேனி மெக் கப்பின் என்பவர் இங்கு ஒரு வீட்டை வாங்கியிருந்தார். வெறும் 1 யூரோ அதாவது இந்திய மதிப்பில் ரூ.85க்கு வீட்டை வாங்கிய அவர் தற்போது அந்த புரனமைக்க ஆள் கிடைக்காமல் திண்டாடி வருகிறார்.
நாளாக நாளாக அந்த வீடு மேலும் மோசமடைந்து வருகிறது. எந்த ஒரு வீடு கட்டுமான நிறுவனமும் இத புரனமைக்க முன் வருவதில்லை. அதற்கு முக்கியமான காரணம் இந்த பகுதி நகர்ப் பகுதியிலிருந்து வெளியில் இருப்பதால் இதை யாரும் புரனமைக்கவில்லை எனக் கூறுகிறார்.
இதன் காரணமாக, ரூ.85க்கு வீடு வாங்கியவருக்கு தற்போது அங்கு வசிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
கோடை வெப்பத்தைத் தகிக்க வைக்கும் தயிர்- எந்த நேரத்தில் சாப்பிடலாம்?
புற்றுநோய், சுகர் என பல நோய்க்குத் தீர்வு வேண்டுமா? இந்த ஒரு இலையே போதும்!