மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 13 April, 2024 5:55 PM IST
Papaya Fruit Squash

பப்பாளி உடல் ஆரோக்கியத்திற்கு உகந்த அதிக சத்து மற்றும் மருத்துவ குணங்களையுடைய பழமாகும். மேலும் பப்பாளி அதிக வருவாய் ஈட்டக்கூடிய ஒரு சிறந்த பயிராகும் விளங்குகிறது. அந்த வகையில் பப்பாளியிலுள்ள சத்துகள் என்ன? பப்பாளி பழ ஸ்குவாஷ் தயாரிக்கும் முறை குறித்து இப்பகுதியில் காணலாம்.

வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்ட இப்பயிரானது தற்பொழுது பொருளாதார ரீதியாக பழப்பண்ணைகளில் பயிரிடப்படுகிறது. ஏனென்றால் இது அதிக மகசூல் கொடுக்க கூடியதாகவும் வாழைப்பழத்திற்கு அடுத்த படியாக அதிக வருமானம் ஈட்டக் கூடியதாகும் உள்ளது.

பப்பாளியிலுள்ள சத்துக்கள்:

பப்பாளியில் நம் கண் பார்வைக்கு தேவையான உயிர்ச்சத்து கரோட்டீன் உள்ளது. இதுவே உடலினுள் சென்று வைட்டமின் ‘ஏ’ என்ற உயிர்ச்சத்தாக மாறுகின்றது. பப்பாளியில் குறைந்த அளவு கலோரிச் சத்திருப்பதால் கொழுப்பு சத்தை தவிப்பவர் கூட இதனை சாப்பிடலாம். பப்பாளியிலுள்ள உயர்ச்சத்து ‘சி’ யின் அளவானது ஏறக்குறைய திராட்சை, ஆப்பிள் மற்றும் எலுமிச்சை பழங்களின் அளவுக்கு ஈடானதாகும்.

100 கிராம் பப்பாளியிலுள்ள சத்துக்களின் அளவு முறை பின்வருமாறு:

  • ஈரப்பதம்-8 கிராம்
  • புரதம்-6 கிராம்
  • கொழுப்பு-1 கிராம்
  • தாதுப்பொருட்கள்-5 கிராம்
  • நார்ச்சத்து-8 கிராம்
  • மாவுச்சத்து-2 கிராம்
  • சக்தி -32 கி.கலோரி
  • சுண்ணாம்பு சத்து -17 மி. கிராம்
  • பாஸ்பரஸ்-13 மி. கிராம்
  • கரோட்டீன் -666 மைக்ரோ கிராம்
  • உயிர்ச்சத்து ‘சி’-57 மி. கிராம்
  • பொட்டாசியம்-69 மி. கிராம்

பப்பாளி பழ ஸ்குவாஷ்: தயாரிக்க தேவையான பொருட்கள்

  • பழக்கூழ்-0 கிலோ
  • சீனி-7 கிலோ
  • தண்ணீர்-2 லிட்டர்
  • சிட்ரிக் அமிலம்-15 கிராம்
  • பாதுகாப்பான் (பொட்டாசியம் மெட்டா பை சல்பைட்)-½ தேக்கரண்டி

செய்முறை:

  • நன்கு பழுத்த அடிபடாத பழங்களாக தேர்வு செய்யவும்.
  • பழங்களை நன்கு கழுவி இரண்டாக நறுக்கவும்.
  • விதைகளை நீக்கி/ தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கவும்.
  • மிக்ஸியில் அரைத்து பழக்கூழ் தயாரிக்கவும்.
  • தண்ணீருடன் சர்க்கரையை சேர்த்து சர்க்கரை கரைசலைத் தயாரிக்கவும். சர்க்கரை முழுவதும் தண்ணீரில் கரைந்தவுடன் சிட்ரிக் அமிலத்தையும் நன்றாக சர்க்கரை கரைசலுடன் கலந்து அறை வெப்பநிலையில் ஆற வைக்க வேண்டும்.
  • பின்னர் சர்க்கரை கரைசலை வடிகட்டி அதனுடன் பப்பாளி பழக்கூழ் சேர்த்து நன்றாக கலக்கவும்.
  • கொதித்து ஆறிய நீரை சிறிதளவு ஒரு கரண்டியில் எடுத்து அதில் பாதுகாப்பானை கரைத்து பின்பு பழபானத்தில் சேர்த்து சுத்திகரிக்கப்பட்ட குப்பிகளில் அடைத்து சேமித்து வைத்து வேண்டிய போது ஒரு பங்கு பப்பாளிப்பழ பானம் மற்றும் மூன்று பங்கு தண்ணீருடன் கலந்து பருகலாம்.

இவை தவிர்த்து பப்பாளி அதனுடைய சுவையான சத்தான பழத்திற்காகவும் அதிலிருந்து பதப்படுத்தப்பட்ட பல பொருட்கள் உற்பத்தி செய்வதற்காகவும் பயன்படுகிறது.  பப்பாளியிலிருந்து எடுக்கப்படும் பப்பைன் என்ற நொதியானது மாமிச வகைகளை மிருதுவாக்கவும், தெளிவான பீர் தயாரிப்பதற்கும் பயன்படுகிறது. (மேற்குறிப்பிட்ட தகவல்கள் அனைத்தும் முனைவர் ஜெ.செல்வி, முனைவர் இ.சுப்பிரமணியன், முனைவர் லூ.நிர்மலா மற்றும் முனைவர் செ.சரவணன் அவர்களால் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது).

Read more:

பப்பாளி பழத்தினை மதிப்பு கூட்டுமுறையில் காசு பார்க்கும் வழிகள்!

English Summary: Papaya Fruit Squash its Profitable in Value Added method
Published on: 13 April 2024, 05:55 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now