ஓய்வூதியதாரர்களுக்கு பென்சன் நிலுவைத் தொகை ஒரே செட்டில்மெண்ட்டாகச் செலுத்தப்பட உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்புக் கிளம்பியுள்ள நிலையில், அதை திசைதிருப்பும் வகையில், மத்திய அரசு இந்த முடிவை எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
அக்னிபத் திட்டத்துக்கு ஒரு பக்கம் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில், ஒரே பதவி ஒரே பென்சன் (One Rank, One Pension) திட்டத்தின் கீழ் ஓய்வூதியதாரர்களுக்கு பென்சன் நிலுவைத் தொகையை வழங்குவதற்கு மத்திய அரசு தயாராகி வருவதாக அதிகாரிகள் தரப்பில் கூறுகின்றனர்.
இதற்காக கூடுதலாக 2000 கோடி ரூபாய் தொகையை மத்திய அரசு வழங்கவுள்ளது.
எப்போது?
அடுத்த சில வாரங்களில் ராணுவ ஓய்வூதியதாரர்களுக்கு பென்சன் நிலுவைத்தொகை செலுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தாமதம் ஏன்?
ஒரே பதவி ஒரே பென்சன் திட்டத்துக்கு எதிராக முன்னாள் ராணுவ வீரர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் பென்சன் தொகை உயர்வு மூன்று ஆண்டுகளாக நிலுவையில் இருந்தது.
உச்ச நீதிமன்றம் அனுமதி
இதையடுத்து கடந்த மார்ச் மாதம் உச்ச நீதிமன்றம் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை பென்சன் தொகையை உயர்த்தும் அரசின் முடிவுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது.
விரைவில் உயருகிறது
இதையடுத்து மத்திய அரசு பென்சன் தொகையை உயர்த்தி நிலுவைத் தொகையுடன் ஓய்வூதியதாரர்களுக்கு மிக விரைவில் செலுத்தவிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க...