நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 5 November, 2022 9:53 AM IST
Pension Amount Hike

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை 38% ஆக உயர்த்தி தீபாவளிக்கு முன்பாகவே மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில், பங்களிப்பு பென்சன் திட்டத்தின் (CPF) பயனாளிகளான ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலை நிவாரணத்தை 15% உயர்த்தியுள்ளது அரசு.

பென்சன் தொகை (Pension Amount)

இதற்கான அறிவிப்பை மத்திய அரசு அக்டோபர் 31ஆம் தேதி வெளியிட்டது. அதில், பங்களிப்பு பென்சன் திட்டத்தின் பயனாளிகளுக்கு அகவிலை நிவாரணத்தை 2022 ஜூலை 1ஆம் தேதி முதல் உயர்த்த குடியரசு தலைவர் முடிவு செய்துள்ளார் என்று தெரிவித்துள்ளது. அகவிலை நிவாரணத் தொகை அடிப்படை கருணைத் தொகையில் 381 விழுக்காட்டில் இருந்து 396 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அரசு தெரிவித்துளது. 1960 நவம்பர் 18ஆம் தேதி முதல் 1985 டிசம்பர் 31ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் பணி ஓய்வுபெற்ற ஏ, பி, சி, டி பிரிவு பயனாளிகளுக்கு முறையே ரூ.3000, ரூ.1000, ரூ.750, ரூ.650 கருணை தொகை வழங்கப்படுகிறது.

இந்நிலையில், இதுவரை ஓய்வூதியதாரர்களுக்கு கருணைத் தொகையில் 381% அகவிலை நிவாரணமாக வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அகவிலை நிவாரணம் 396% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 2022 ஜூலை 1 முதல் இந்த அகவிலை நிவாரண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால், மேற்கூறியபடி தகுதியான ஓய்வூதியதாரர்களுக்கு பென்சன் தொகை உயரும். மேலும், ஜூலை முதலான மாதங்களுக்கு அகவிலை நிவாரணம் நிலுவைத்தொகையும் கிடைக்கும். இறந்துபோன ஓய்வூதியதாரர்களின் கணவன்/மனைவி அல்லது தகுதியான பிள்ளைகளுக்கும் இந்த அகவிலை நிவாரண உயர்வு பொருந்தும்.

மேலும் படிக்க

பழைய பென்சன் திட்டம் முதல் அகவிலைப்படி வரை: தமிழ்நாடு பென்சனர்கள் கோரிக்கை!

500 ரூபாயில் 5 லட்சம் லாபம் தரும் திட்டம் பற்றி தெரியுமா உங்களுக்கு?

English Summary: Pension Hike: Who Gets It - Full Details Here!
Published on: 05 November 2022, 09:53 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now