Others

Friday, 02 September 2022 10:06 PM , by: Elavarse Sivakumar

இந்தத் திட்டத்தின் கீழ் மூத்த குடிமக்களுக்கு 2500 ரூபாய் வரை பென்சன் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு சிறப்புத் திட்டங்களை மத்திய அரசும் மாநில அரசுகளும் செயல்படுத்தி வருகின்றன.

அந்த வகையில், மூத்த குடிமக்களுக்கு நிறைய பென்சன் திட்டங்கள் உள்ளன. 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மாதந்தோறும் 2500 ரூபாய் வரை பென்சன் தரும் திட்டத்தை டெல்லி அரசு அறிவித்துள்ளது.

ரூ.2500

இந்த முதியோர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் அரவிந்த் கெஜ்ரிவால் அரசு 60 வயது முதல் 69 வயது வரை உள்ள முதியவர்களுக்கு மாதந்தோறும் 2000 ரூபாய் வழங்குகிறது.

வங்கிக்கணக்கில் வரவு

இதுதவிர, 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு ஓய்வூதியமாக மாதம் 2500 ரூபாய் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், மக்களுக்கு பெரிய அளவில் நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்தத் தொகை நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது.

தகுதி

ஒவ்வொரு 3 மாதங்களுக்கும் இந்தத் தொகை மாற்றப்படும். டெல்லி அரசின் இத்திட்டத்தின் பயன் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படுகிறது. குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.50,000 வரை உள்ளவர்கள் மட்டுமே இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியும்.

ஆவணங்கள்

ரேஷன் அட்டை
வயதுச் சான்று
அடையாள அட்டை
ஆதார் அட்டை
வாக்காளர் அட்டை
குடியிருப்பு சான்றிதழ்
வங்கிக் கணக்குப் புத்தகத்தின் நகல்
பாஸ்போர்ட் அளவு போட்டோ 2
மொபைல் நம்பர்

விண்ணப்பிப்பது எப்படி?

இந்த ஓய்வூதிய திட்டத்திற்கு விண்ணப்பிக்க https://edistrict.delhigovt.nic.in/in/en/Public/Downloads.html என்ற வெப்சைட்டில் செல்ல வேண்டும்.
இதிலிருந்து படிவத்தை பதிவிறக்கம் செய்து தேவையான அனைத்து தகவல்களையும் படிவத்தில் நிரப்ப வேண்டும்.


மேலும் படிக்க...

இந்த 5 ரூபாய் நோட்டு இருந்தால், நீங்களும் லட்சாதிபதிதான்!

கர்ப்பிணியை தள்ளுவண்டியில் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற கணவர்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)