மத்திய அரசு PMVVY திட்டம் மூலமாக 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு மானியத்துடன் கூடிய ஓய்வூதியத்தை வழங்க முன்வந்துள்ளது. இதன்மூலம் மூத்த குடிமக்களுக்கு மாதம் 18,500 ரூபாய் ஓய்வூதியமாகக் கிடைக்கும். இந்தத்திட்டத்தில் சேருவதற்கானக் காலக்கெடு 2023ம் ஆண்டு மார்ச் மாதம் 31ம் தேதியுடன் முடிவடைகிறது.
எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு, அதற்காக, எதாவது செய்வதே புத்திசாலித்தனம். அவ்வாறு ஒவ்வொரு நபரும் அவர்களின் எதிர்கால தேவையை கருத்திற்கொண்டு நிதி பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வண்ணம் பல்வேறு முதலீட்டு முறைகளை நாடுகின்றனர். இதற்கென்று பல்வேறு முதலீட்டு முறைகள் உள்ளன, அதிலும் குறிப்பாக மூத்த குடிமக்களின் நலனுக்காக அரசாங்கம் சிறப்பான திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.
பணத்திற்கு பாதுகாப்பு
மத்திய அரசின் இந்த திட்டத்தின் மூலம் வயது மூப்படைந்த பிறகு அவர்களுக்கு மிகப்பெரிய ஓய்வூதியம் கிடைக்கும். மேலும் இதில் நீங்கள் முதலீடு செய்யும் அசல் பணம் பாதுகாப்பாக இருப்பதோடு நிலையான வருமானமும் கிடைக்கும்.
10 ஆண்டுகளுக்குப் பிறகு
மத்திய அரசின் இந்த மூத்த குடிமக்கள் பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனாவில் (PMVVY) திட்டத்தின் கீழ், 60 வயதிற்குப் பிறகு கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து ஒவ்வொரு மாதமும் ரூ.18500 ஓய்வூதியம் பெறமுடியும். இதில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு உங்கள் முழு முதலீடும் திரும்பப் பெறப்படும்.
ரூ.15 லட்சம் முதலீடு
அரசாங்கம் PMVVY திட்டம் மூலமாக 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு மானியத்துடன் கூடிய ஓய்வூதியத்தை வழங்குகிறது. இதன்மூலம் மூத்த குடிமக்களுக்கு மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு அல்லது வருடாந்திர ஓய்வூதிய வசதி வழங்கப்படுகிறது, இந்தத் திட்டத்தின் பலனை முழுமையாக பெற விரும்புபவர்கள் மொத்தமாக ரூ.15 லட்சம் முதலீடு செய்ய வேண்டும். மார்ச் 31, 2023 வரை 60 வயது வந்த எந்தவொரு நபரும் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
மூத்த குடிமக்களுக்கான இந்தத் திட்டத்தின் காலம் மொத்தம் 10 ஆண்டுகள். PMVVY-ன் கீழ் ஓய்வூதியம் வாங்குபவர் தேர்ந்தெடுக்கும் முறையைப் பொறுத்து மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு அல்லது வருடாந்திர அடிப்படையில் செலுத்தலாம். முதல் தவணை செலுத்திய நாளிலிருந்து 1 வருடம், 6 மாதங்கள், 3 மாதங்கள் அல்லது 1 மாதத்திற்குப் பிறகு தொடங்குகிறது. உதாரணமாக, நீங்கள் மாதாந்திர ஓய்வூதியம் செலுத்தும் முறையைத் தேர்ந்தெடுத்திருந்தால், இப்போது திட்டத்தை வாங்கினால், 1 மாதத்திற்குப் பிறகு உங்களுக்கு ஓய்வூதியம் கிடைக்கும். இத்திட்டத்தின் கீழ் கிடைக்கும் குறைந்தபட்ச கொள்முதல் விலை மாதாந்திர ஓய்வூதியம் ரூ.1,62,162, காலாண்டு ஓய்வூதியம் ரூ.1,61,074, அரையாண்டு ஓய்வூதியம் ரூ.1,59,574 மற்றும் ஆண்டு ஓய்வூதியம் ரூ.1,56,658 ஆகும்.
வட்டி
இத்திட்டத்தின் கீழ் அதிகபட்ச கொள்முதல் விலை மாதாந்திர ஓய்வூதியம் ரூ.15 லட்சம், காலாண்டு ஓய்வூதியம் ரூ.14,89,933, அரையாண்டு ஓய்வூதியம் ரூ.14,76,064 மற்றும் ஆண்டு ஓய்வூதியம் ரூ.14,49,086 ஆகும். 31-03-2023 வரை வாங்கிய பாலிசிகளுக்கு, திட்டத்திற்குப் பொருந்தும் வட்டி விகிதம் மாதந்தோறும் 7.40% ஆக இருக்கும்.
மேலும் படிக்க...
விடாது துரத்தும் காகங்கள்- தலையில் கொத்துவதால் அலறும் பெண்மணி!