Others

Saturday, 30 July 2022 07:52 AM , by: Elavarse Sivakumar

நம்முடையக் கனவை அடைய முயற்சி செய்தால் போதும், நிச்சயம் நிறைவேற்றிக்கொள்ள முடியும் என்பதற்கு இந்த 70 வயது தாத்தாவே முன் உதாரணம். குறிப்பாக Ph.d படிக்க வேண்டும் என்ற தனது ஆசையை இந்த வயதில் நிறைவேற்றியிருப்பது, மிகப் பெரிய ஆச்சர்யம்தான். அவருக்கு பிரதமர் மோடி கையால், Ph.d பட்டம் வழங்கி கவுரவித்திருக்கிறது அண்ணாப் பல்கலைக்கழகம்.

1980-ல் எம்.டெக். பட்டம்

சென்னை கிண்டி வளாகத்தில் உள்ள அழகப்பா தொழில்நுட்ப கல்லூரியில் 1978-ம் ஆண்டு ஆர்.ராஜகோபால் என்பவர் வேதியியல் பொறியியல் துறையில் பி.டெக். பட்டம் பெற்றார். அதன் பிறகு 1980-ம் ஆண்டு எம்.டெக். பட்டம் பெற்றார்.

2013-ல் ஓய்வு

இதனைத்தொடர்ந்து, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார். பல்வேறு ஊர்களில் பணியாற்றிய ராஜகோபால் 2013-ம் ஆண்டு ஓய்வு பெற்றார். அதன் பிறகு அவர் சென்னை திரும்பினார். அவர் பணியாற்றிய காலங்களில் ஓ.என்.ஜி.சி.யில் உருவாகும் கழிவுநீர் பிரச்சினைக்கு ஆராய்ச்சி மூலம் தீர்வு காண முயன்றார். அப்போது அவரது முயற்சியை கண்டறிந்த ஓ.என்.ஜி.சி. பொது மேலளார் அவரை ஊக்கப்படுத்தி பி.எச்.டி. படிக்குமாறு அவ்வப்போது ஊக்கம் அளித்து வந்தார்.

மகளுடன்

இந்த சூழலில் ஓய்வுக்கு பிறகு சென்னை திரும்பிய அவர் தொழில் துறையில் பொறியியல் பட்டப்படிப்பை படித்துக்கொண்டிருந்த தனது மகளை அண்ணா பல்கலைக்கழகத்தில் விடுவதற்காக வந்து செல்வார்.

ஆராய்ச்சி ஆசை

அப்போது பி.எச்.டி. ஆராய்ச்சி படிப்பை தொடர அவருக்கு மீண்டும் ஆர்வம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி. படிப்புக்கு விண்ணப்பித்து தனது ஆராய்ச்சியை தொடர்ந்தார். 70 வயது ஆன நிலையிலும் படிப்பு மீதுள்ள ஆர்வம் காரணமாக ஆராய்ச்சி படிப்பை முடித்து அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி. டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.
அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பிரதமர் மோடி கையால், Ph.d பட்டம் வழங்கி கவுரவித்திருக்கிறது அண்ணாப் பல்கலைக்கழகம்.

ஆரம்ப ஆய்வுதான்

இதுகுறித்து ராஜகோபால் கூறுகையில், "ஓ.என்.ஜி.சி.யில் உருவாகும் கழிவுநீர் பிரச்சினைக்கு ஆராய்ச்சி மூலம் தீர்வு காண முயன்றேன். ஆய்வகத்தில் உள்ள தண்ணீரை 2 வெவ்வேறு முறைகளில் சுத்திகரித்தேன். அவை மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் பரிந்துரைக்கப்பட்ட வரம்புகளுக்குள் வருமா? என்பதை கண்டறிய முடிவுகளை ஒப்பிட்டு பார்த்தேன். இது ஒரு ஆரம்ப ஆய்வுதான். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க...

மனைவியை ஏமாற்ற பாஸ்போர்ட் கிழிப்பு - கைது செய்த போலீஸார்!

பொருளாதாரத்திற்கு இயற்கை விவசாயமும் அடிப்படை - பிரதமர் மோடி!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)