Others

Friday, 16 September 2022 01:38 PM , by: Elavarse Sivakumar

பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் நீங்கள் கட்டும் புதிய வீட்டிற்கும் ரூ.2.67 லட்சம் வரை மானியம் வழப்படுகிறது. இதனைப் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டால், இந்தக் குறிப்பிட்ட எண்ணைத் தொடர்பு கொண்டுத் தீர்வு காணலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீங்களும் பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்துக்கு விண்ணப்பித்து, இந்தத் திட்டத்தின் கீழ் உங்கள் வீடு இன்னும் கிடைக்கவில்லை என்றால் கவலைப்படத் தேவையில்லை. ஒரே ஒரு அழைப்பின் மூலம் புகார் செய்யலாம்.

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், நாட்டிலுள்ள ஏழை எளிய மக்களுக்கு அரசு வீடுகளை வழங்குகிறது. இத்திட்டம் 2015ஆம் ஆண்டு மத்திய அரசால் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் குடிசைப் பகுதிகள், கட்சா வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு 2022ஆம் ஆண்டுக்குள் வீடுகள் வழங்க அரசு முடிவு செய்தது. இதனுடன் மானிய வசதியும் வழங்கப்படுகிறது.

எவ்வளவு மானியம்?

நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தில் ரூ.2.67 லட்சமும், ஊரக வீட்டு வசதி திட்டத்தில் ரூ.1.67 லட்சமும் மானியமாக வழங்கப்படுகிறது.

வருமான வரம்பு

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், மூன்று லட்சத்துக்கும் குறைவான வருமானம் உள்ளவர்கள், வீடு இல்லாதவர்கள் பயன்பெறலாம். இதில் மூன்று தவணைகளில் பணம் வழங்கப்படுகிறது. முதல் தவணையாக 50,000, இரண்டாவது தவணையாக 1.50 லட்சம், மூன்றாம் தவணையாக 50,000 வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் உங்களுக்கும் ஏதேனும் சிக்கல் இருந்தால் அதைத் தீர்க்கலாம். அதற்கு கீழ்க்காணும் எண்களில் புகார் கொடுக்கலாம்.

மாநில அளவிலான கட்டணமில்லா எண்: 1800-345-6527
மொபைல் எண் & வாட்ஸ்அப் எண்: 7004-19320
கிராமப்புறம்: 1800-11-6446
நகர்ப்புறம்: 1800-11-3377, 1800- 11-3388
உங்கள் புகார் பதிவு செய்யப்படும் போது அதற்கு 45 நாட்களுக்குள் தீர்க்கப்படும்.

மேலும் படிக்க...

துப்புரவு பணியாளரை காதலித்து கரம் பிடித்த பெண் டாக்டர்!

ராஜினாமா செய்பவர்களுக்கு 10% சம்பள உயர்வு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)