கொலை குற்றவாளிக்கு தூக்கு தண்டனை தருவதற்கு பதிலாக விஷ ஊசி செலுத்தி மரண தண்டனை அளித்த செய்தி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அமெரி்க்காவில், இருவரை கொலை செய்த வழக்கில், குற்றவாளிக்கு அமெரிக்கா சட்டப்படி விஷ ஊசி செலுத்தி மரண தண்டனை விதிக்கப்பட்டது.
மரண தண்டனை (Death Punishment)
அமெரிக்காவின் ஒக்கலஹாமா மாகாணத்தைச் சேர்ந்த டெனால்டு கிரான்ட், 25 என்ற இளைஞர், தனது காதலி வழக்கு ஒன்றில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டதால், அவரை ஜாமினில் எடுக்க பணம் தேவை என்பதால், 2001 ம் ஆண்டு ஹோட்டல் ஒன்றிற்குள் புகுந்து கொள்ளையடிக்க முயன்றார்.
இதில் ஏற்பட்ட மோதலில் இருவரை கொலை செய்தார். அதனால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீதான வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு 2005-ல் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
விஷ ஊசி ( Poisoned Injection)
தண்டனையை குறைக்க கோரி பல முறை மனுக்கள் தாக்கல் செய்தும் தள்ளுபடியானது. இதையடுத்து நேற்று அமெரிக்க சட்டப்படி குற்றவாளி டெனால்டு கிரான்ட்டிற்கு விஷ ஊசி செலுத்தி மரண தண்டனை விதிக்கப்பட்டதாக அமெரிக்க அட்டர்னி ஜெனரல் தெரிவித்தார். இதன் மூலம் அமெரிக்காவில் இந்தாண்டில் முதல் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க