ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு தபால் அலுவலகங்களும், வங்கிகளும் போட்டிபோட்டுக்கொண்டு கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களை வழங்கி வருகின்றது. ஃபிக்ஸட் டெபாசிட்டுகளை பொறுத்தவரையில் வங்கிகளை விட, தபால் நிலையங்கள் சிறந்ததாக கருதப்படுகிறது.
பிக்சட் டெபாசிட் (Fixed Deposit)
தபால் அலுவலகத் திட்டங்கள் மத்திய அரசாங்கத்துடன் இணைக்கப்பட்டுள்ளது, இதன் ஃபிக்ஸட் டெபாசிட்டுகள் பாதுகாப்பான முதலீட்டு விருப்பமாக கருதப்படுகிறது. தபால் அலுவலகங்கள் வழங்கக்கூடிய இந்த திட்டங்கள் அரசாங்கத்தால் காப்பீடு செய்யப்படுகின்றன. வங்கிகளின் எஃப்டிகளுக்கு ரூ.5 லட்சம் வரையிலான டெபாசிட்டுகளுக்கு காப்பீடு செய்யப்படுகிறது. வங்கியின் ஃபிக்ஸட் டெபாசிட்டுகள் இந்திய ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகிதத்துடன் இணைக்கப்பட்டுள்ளது, இருப்பினும் இது பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்தால் பாதிப்பிற்குள்ளாகும்.
தபால் நிலையம் vs வங்கி
வங்கிகள் மற்றும் தபால் நிலைய ஃபிக்ஸட் டெபாசிட்டுகள் இரண்டும் ரூ. 1.5 லட்சம் வரையிலான வரிச் சலுகைகளை வழங்குகின்றன. வங்கிகளின் எஃப்டிகள் 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரை நீடிக்கும் மற்றும் தபால் அலுவலக எஃப்டிகள் 5 ஆண்டுகள் வரை மட்டுமே இருக்க முடியும். சில வங்கிகள் எஃப்டிகளுக்கு அதிக வட்டி விகிதங்களை வழங்குகின்றன.
இருப்பினும் வருமானத்தைப் பொறுத்தவரை தபால் அலுவலகத் திட்டங்கள் பாதுகாப்பான முதலீட்டு விருப்பமாக விளங்குகிறது.
மேலும் படிக்க
அதிக வருமானம் தரும் SBI-யின் சூப்பரான டெபாசிட் திட்டம்!
புதிய இ-பாஸ்புக் திட்டம் அறிமுகம்: PF பயனர்களுக்கு சூப்பர் வசதி!