அஞ்சலகத் திட்டங்களில் கண்டிப்பாக சிறந்த வருமானத்தை பெறுவீர்கள். வங்கிகளை ஒப்பிடுகையில் தபால் அலுவலக சிறு சேமிப்பு திட்டங்கள் சிறந்தது. குறைந்த செலவில் முதலீடு செய்வதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம். அத்தகைய ஒரு தபால் அலுவலகத் திட்டத்தைக் குறித்து காணலாம். தபால் அலுவலகத்தின் தொடர்ச்சியான வைப்பு உங்களுக்கு சிறந்த வருவாயைப் தரும்.
தபால் அலுவலக RD திட்டம் என்றால் என்ன?
ஒட்டுமொத்தமாக, இந்த திட்டத்தின் மூலம், நீங்கள் மிகக் குறைந்த பணத்தில் முதலீடு செய்ய ஆரம்பிக்கலாம். இது தவிர, உங்கள் பணமும் முற்றிலும் பாதுகாப்பாக இருக்கும். இதில் நீங்கள் மாதம் ரூ. 100 முதல் முதலீடு செய்யலாம். நீங்கள் எவ்வளவு முதலீடு செய்யலாம் என்பதற்கு அதிகபட்ச வரம்பு இல்லை. அஞ்சலக ஆர்டி டெபாசிட் கணக்கு என்பது சிறந்த வட்டி விகிதத்துடன் சிறிய தவணைகளை டெபாசிட் செய்வதற்கான அரசாங்க உத்தரவாத திட்டமாகும்.
உங்களுக்கு எவ்வளவு வட்டி கிடைக்கும் என்று தெரியுமா?
அஞ்சலகத்தில் திறக்கப்படும் RD கணக்கு 5 வருடங்கள் ஆகும். அதை விட குறைவாக திறக்கப்படுவதில்லை. ஒவ்வொரு காலாண்டிலும் (ஆண்டு விகிதத்தில்) டெபாசிட் செய்யப்பட்ட பணத்திற்கு வட்டி கணக்கிடப்படுகிறது. பின்னர் ஒவ்வொரு காலாண்டின் முடிவிலும் கூட்டு வட்டி உங்கள் கணக்கில் சேர்க்கப்படும். இந்திய தபால் அலுவலகத்தின் இணையதளத்தின்படி, தற்போது ஆர்.டி திட்டத்தில் 5.8 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. மத்திய அரசு தனது சிறு சேமிப்புத் திட்டங்களில் ஒவ்வொரு காலாண்டிலும் வட்டி விகிதத்தை அறிவித்து வருகிறது.
நீங்கள் 10 ஆயிரம் ரூபாயை முதலீடு செய்தால், நீங்கள் 16 லட்சத்திற்கு மேல் பெறுவீர்கள். தபால் அலுவலக RD திட்டத்தில் நீங்கள் ஒவ்வொரு மாதமும் 10 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால், அதுவும் 10 வருடங்களுக்கு, ரூ. 16,26,476 லட்சம் பெறுவார்.
RD கணக்கு பற்றிய சில சிறப்பு விஷயங்கள்
நீங்கள் சரியான நேரத்தில் RD தவணையை டெபாசிட் செய்யாவிட்டால், நீங்கள் அபராதம் செலுத்த வேண்டும். தவணை தாமதத்திற்கு, நீங்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு சதவீத அபராதம் செலுத்த வேண்டும். இதனுடன், நீங்கள் தொடர்ந்து 4 தவணைகளை டெபாசிட் செய்யாவிட்டால், உங்கள் கணக்கு மூடப்படும். இருப்பினும், கணக்கு மூடப்படும் போது, அடுத்த 2 மாதங்களுக்கு அதை மீண்டும் செயலில் கொண்டுவரலாம்.
மேலும் படிக்க...
Post Office Time Deposit Yojana : தபால் அலுவலகத்தில் பணம் இரட்டிப்பாகும், அம்சங்கள்!