உங்களது பணத்தை பாதுகாப்பாக முதலீடு செய்ய விரும்புகிறீர்களா, தபால் அலுவலகத் திட்டங்கள் மூலம் முதலீடு செய்யலாம். தபால் அலுவலக திட்டம் ஒரு வகையில் பாதுகாப்பான முதலீட்டுத் திட்டங்களில் ஒன்றாகும். உங்கள் பணத்தை பாதுகாப்பாக வைத்திருக்கவும், மற்ற ஆதாரங்களை விட அதிக நன்மைகளை பெறுவதற்கும் தபால் அலுவலகம் பல பயனுள்ள திட்டங்களை வழங்குகிறது. ஒரு மாதத்திற்கு வெறும் 100 ரூபாய் சேமித்து சில வருடங்களில் பலமடங்காக எடுத்துக்கொள்ளலாம்.
தேசிய சேமிப்பு சான்றிதழ்
இது இந்திய தபால் அலுவலகம் வழங்கும் டைம் டெஸ்டட் திட்டம். இந்த திட்டத்தில், நீங்கள் சில ஆண்டுகளிலேயே பெரிய தொகையை பெறலாம். தபால் அலுவலகத்தில் உங்கள் பணம் முற்றிலும் பாதுகாப்பாக இருக்கும். எனவே, நீங்கள் உங்கள் பணத்தை எந்த ஆபத்தும் இல்லாமல் முதலீடு செய்து உங்கள் குடும்பத்தின் எதிர்காலத்தை பாதுகாப்பாக வைக்கலாம்.
தேசிய சேமிப்பு சான்றிதழின் நன்மைகள்
தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சில நிபந்தனைகளுடன் 1 வருடத்திற்குப் பிறகு உங்கள் கணக்கில் இருந்து பணத்தை எடுக்கலாம். நிதி ஆண்டின் ஒவ்வொரு காலாண்டின் (3 மாதங்கள்) தொடக்கத்தில் வட்டி விகிதங்கள் அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்படுகின்றன. தற்போது, இந்த திட்டத்திற்கு ஆண்டுக்கு 6.8 சதவீத வட்டி கிடைக்கிறது. இந்தத் திட்டத்தின் கீழ், வருமான வரி பிரிவு 80 சி -யின் கீழ் ஆண்டுதோறும் 1.5 லட்சம் ரூபாய் வரி விலக்கு பெறலாம்.
நீங்கள் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்?
இந்த திட்டத்தில் நீங்கள் ஒரு மாதத்திற்கு 100 ரூபாய் முதலீடு செய்ய ஆரம்பிக்கலாம்.
நீங்கள் 5 வருடங்களுக்கு பிறகு 6.8 வட்டி விகிதத்தில் ரூ. 20.85 லட்சம் தொகையை விரும்பினால், ரூ .15 லட்சம் முதலீடு செய்தால் அதற்கு வட்டியாக சுமார் ரூ. 6 லட்சம் லாபம் கிடைக்கும்.
மேலும் படிக்க...
Post Office Scheme: மாதம் ரூ.1500 முதலீடு செய்து ரூ. 35 லட்சம் பெறலாம்!