இந்திய அஞ்சல் துறை பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு செல்வமகள் சேமிப்பு எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தி அதனை சிறப்பாக செயல்படுத்தியும் வருகிறது. இந்த திட்டத்தில் ஆன்லைன் வாயிலாக நீங்கள் வீட்டில் இருந்து கூட டெபாசிட் தொகையை செலுத்தலாம். அதற்கான முறைகள் குறித்து இப்பதிவில் காண்போம்.
செல்வ மகள் சேமிப்பு திட்டம்
இந்தியாவில் வங்கிகளுக்கு இணையாக அஞ்சல் நிலையங்களும் பல்வேறு சேமிப்பு திட்டங்களை கொண்டு வந்துள்ளது. இந்த திட்டங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. மற்ற திட்டங்களை தொடர்ந்து பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் சேரும் பயனர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த திட்டத்தில் ஆண்டுக்கு 7.6% வட்டி வழங்கப்படுகிறது. இது மற்ற திட்டங்களை காட்டிலும் அதிகம். 2 பெண் குழந்தைகள் வைத்துள்ளார்கள் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் சேரலாம். அதாவது 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தையின் பெற்றோர் தங்கள் குழந்தையின் பேரில் கணக்கை தொடங்கி சேமிக்கலாம். குறைந்த பட்சம் ரூ. 250 செலுத்தி இத்திட்டத்தில் சேர வேண்டும்.
இந்த திட்டத்தில் பணம் செலுத்த நீங்கள் மாதம் போஸ்ட் ஆபிஸிற்கு செல்ல வேண்டிய தேவை இல்லை. மாதந்தோறும் ஆன்லைன் வாயிலாகவே டெபாசிட் தொகையை செலுத்தலாம். அதாவது POSB மொபைல் பேங்க் வசதியை பயன்படுத்தி தொகையை செலுத்தலாம்.
அதுமட்டுமல்ல அஞ்சல் நிலைய அலுவலகத்தின் செயலியையும் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தலாம். அதனை தொடர்ந்து இதற்கு பணம் செலுத்த NEFT மற்றும் RTGS ஆகிய வசதிகளும் உள்ளது. இதன் மூலம் எந்தவொரு கணக்கில் இருந்தும் நீங்கள் பணத்தை செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் நேரடியாக செலுத்தலாம்.
மேலும் படிக்க
PF மற்றும் முதலீடுகளில் நாமினேஷன் செய்வது எப்படி? அதன் அவசியம் என்ன?
மாதம் ரூ.64,000 பென்சன்: இந்த திட்டத்தில் பயன்பெறுவது எப்படி?