தபால் துறை சார்பில் மானியம் வழங்கப்படுவதாக வெளியாகும் வதந்திகளை நம்ப வேண்டாம் என இந்திய தபால்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கிராமப்புற மக்களின் நம்பிக்கை நட்சத்திரம் என்றால் அது தபால் அலுவலக சேமிப்புத்திட்டங்கள்தான்.
மோசடி (Fraud)
இந்நிலையில், தபால் அலுவலக வாடிக்கையாளர்களுக்கு இந்திய தபால் துறை வெளியிட்டுள்ள எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
அண்மைக்காலமாக ஆன்லைன் மோசடி கும்பல்களின் அட்ராசிட்டி அதிகரித்துவிட்டது. அரசு, ரிசர்வ் வங்கி, வருமான வரித் துறை, EPFO என பல பெயர்களில் வேடமிட்டு ஆன்லைன் மோசடி கும்பல்கள் பணக் கொள்ளையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த வரிசையில் தற்போது இந்திய தபால் துறை பெயரிலும் மோசடி கும்பல்கள் கொள்ளை அடிக்க கிளம்பிவிட்டன.அதாவது, இந்திய தபால் துறை சில சர்வே, குயிஸ் போட்டிகளை நடத்தி வருவதாகவும், அதன் மூலம் மானியத் தொகை வழங்கி வருவதாகவும் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பப்பட்டு வருகிறது.
ஆனால் அத்தகைய மானியம், போனஸ் அல்லது பரிசுகளை இந்தியத் தபால்துறை வழங்குவதில்லை . மேலும், இதுபோன்ற வதந்திகளை யாருக்கும் பரப்ப வேண்டாம் எனவும் தபால் துறை அறிவுறுத்துகிறது.இதுமட்டுமல்லாமல், பொய் தகவலை நம்பி அடையாளம் தெரியாத நபர்களிடம் பிறந்த தேதி, அக்கவுண்ட் நம்பர், பாஸ்வோர்ட், ஓடிபி, மொபைல் எண் உள்ளிட்ட தனிநபர்கள் விவரங்களை பகிர்ந்துகொள்ள வேண்டாம் .
மேலும், இதனால் யாரேனும் பணத்தை இழக்க நேரிட்டால் அதற்கு இந்திய தபால் துறை பொறுப்பில்லை. இவ்வாறு இந்திய தபால்துறை தனது அறிக்கையில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க...
கட்டிப்பிடி வைத்தியம்- உடல் ஆரோக்கியத்திற்கு அதிகப்பலன் தரும்!
வாட்டும் வெயிலிலும் உடலைக் குளுகுளுவென வைத்துக்கொள்ள வேண்டுமா?