Others

Sunday, 20 February 2022 08:37 PM , by: Elavarse Sivakumar

உங்கள் 55 வயதில், கோடீஸ்வரராக இருக்க வேண்டும் என விரும்பினால், இந்தத் திட்டம் நிச்சயம் கைகொடுக்கும். ஏனெனில், இந்த திட்டத்தில் 25 வயதில் முதலீடு செய்ய தொடங்கினால், அடுத்த 30 வருடங்களில் நீங்கள் கோடீஸ்வரராக இருப்பீர்கள் என்பது தான் உண்மை.

முதலீட்டு திட்டங்களில் பொது வருங்கால வைப்பு நிதி (PPF) என்பது பலரது விருப்பமானத் தேர்வு. இதில் முதலீடு செய்வதன் மூலம் சிறந்த வருமானம் பெருவதுடன், வரியையும் மிச்சப்படுத்திக் கொள்ள முடியும். அதேபோல், இந்த திட்டத்தில் PPF திட்டத்தின் வட்டி விகிதம் 7.1 சதவீதம் ஆகும். திட்டம் முதிர்ச்சியைடயும் போது வட்டி தொகை முக்கியப் பங்கு வகிக்கும்.

ரூ.1.5கோடி எப்படி?

இதில் ஓராண்டுக்கு அதிகப்பட்சம் 1.5 லட்சம் ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். அதாவது, மாதம் 12,500 ரூபாய் வீதம் தவறாது செலுத்தி வர வேண்டும். 15 ஆண்டுகளில் திட்டம் முதிர்ச்சியடையும் போது, 5 ஆண்டுகள் நீட்டித்துக்கொண்டே இருக்கலாம். அப்படி, 30 ஆண்டு வருகையில், உங்களது PPF கணக்கில் இருக்கும் மொத்த தொகை 1 கோடியே 54 லட்சத்து 50 ஆயிரத்து 911 ஆகும். இதில், நீங்கள் முதலீடு செய்த தொகை வெறும் 45 லட்சம் தான். ஆனால், கிடைத்த வட்டித் தொகை ரூ1 கோடியே 9 லட்சம் ஆகும்.
எனவே, இந்த திட்டத்தில் 25 வயதில் நீங்கள் முதலீடு செய்ய தொடங்கினால், 55 வயதில் நீங்கள் கோடீஸ்வரர் ஆவதை யாராலும் தடுக்க முடியாது.

வட்டி கணக்கீடு?

PPF வட்டி மாதந்தோறும் கணக்கிடப்படுகிறது. ஆனால், வட்டி தொகை ஆண்டு இறுதியில் தான் உங்கள் கணக்கில் செலுத்தப்படும். மாதந்தோறும் கணக்கிடப்படும் வட்டி தொகை, மார்ச் 31 ஆம் தேதி தான் செலுத்தப்படும்.
PPF கணக்கில் இந்த தேதிக்குள் பணம் செலுத்த வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. நீங்கள் ஒவ்வொரு மாதமோ, காலாண்டிலோ, அரையாண்டிலோ, ஒரே பிரிமியமாக வருடத்திற்கோ செலுத்தலாம்.

அதிக வட்டி பெறுவது எப்படி?

PPF கணக்கில் ஒவ்வொரு மாதமும் 1 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரையுள்ள பணத்திற்கு மட்டுமே வட்டி கணக்கிடப்படுகிறது. நீங்கள் PPF கணக்கில் குறிப்பிட்ட மாதம் 5 ஆம் தேதிக்குள் பணம் டெபாசிட் செய்துவிட்டால், வட்டிக்கு கணக்கிடப்படும். ஆனால், ஆறாம் தேதி செலுத்தப்பட்டால், அந்த மாதத்தின கணக்கில் அப்பணம் கணக்கில் கொள்ளப்படாது. அடுத்த மாதம் தான் வட்டி தொகை உங்களுக்கு கிடைக்கும்.

உதாரணமாக, நீங்கள் ஏப்ரல் 5 ஆம் தேதி 50 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்கிறீர்கள். அப்போது, ஏற்கனவே மார்ச் 31 ஆம் தேதி 10 லட்சம் ரூபாய் கணக்கில் இருக்கும். ஏப்ரல் 5 முதல் ஏப்ரல் 30 வரை, PPF தொகையானது 10 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ஆகும். எனவே, இந்த தொகையை 7.1 சதவீத வட்டி விகிதத்தில் கணக்கிட்டால், 6 ஆயிரத்து 212 ரூபாய் கிடைத்திடும்.


அதே சமயம், 50 ஆயிரம் ரூபாயை ஏப்ரல் 5 ஆம் தேதி அல்லாமல் 6 ஆம் தேதி செலுத்தினால், அம்மாத்திற்கான வட்டி தொகைக்கு அப்பணம் சேர்க்கப்படாது.
எனவே, கணக்கில் இருக்கும் 10 லட்சம் ரூபாய்க்கு மட்டுமே 7.1 வட்டி தொகை கணக்கிடப்படும். இதில், உங்களுக்கு 5 ஆயிரத்து 917 ரூபாய் மட்டுமே கிடைத்திடும். இந்த வழிமுறையில் முதலீட்டுத் தொகை 50,000 மட்டுமே, ஆனால் வட்டியில் வித்தியாசத்தை ஏற்படுத்தியது. PPF இல் உங்கள் பணத்திற்கு அதிகபட்ச வட்டியை விரும்பினால், இந்த ட்ரிக்ஸை மனதில் வைத்துக்கொண்டு, மாதத்தின் 5 ஆம் தேதிக்குள் பணத்தை டெபாசிட் செய்ய வேண்டும். PPF இல் 1.5 லட்சம் முதலீடு செய்தால் வரி விலக்கு அளிக்கப்படும்.

மேலும் படிக்க...

மூத்தக் குடிமக்களுக்கான சிறப்பு டெபாசிட் திட்டம் நீட்டிப்பு- SBI அறிவிப்பு!

மனைவியைக் கொன்றுக் கூறுபோட்டு சமைத்துத் தின்றக் கணவன்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)