நள்ளிரவில் சாக்கடையில் சிக்கிக்கொண்ட பசுவை (Cow) மீட்க உதவிய பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியின் வீடியோ பரவி வருகிறது. பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
பஞ்சாப் முதல்வர்
பஞ்சாப் முதல்வராக இருந்த அமரீந்தர் சிங் ராஜினாமா செய்து தனிக்கட்சி துவங்கினார். இதனையடுத்து காங்கிரஸ் தலைமை பட்டியலினத் தலைவர் மற்றும் மூன்று முறை சட்டசபை உறுப்பினரான சரண்ஜித் சிங் சன்னியை அடுத்த முதல்வராக நியமித்தது. இவர் பதவி ஏற்ற சில மாதங்களில் பஞ்சாப் காங்கிரஸ் கட்சியில் இவர் மேற்கொண்ட சில முக்கிய நடவடிக்கைகள் வரவேற்பைப் பெற்றன.
விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை
முன்னதாக பஞ்சாப் தேசிய நெடுஞ்சாலையில் சர்ச்சைக்குரிய மூன்று விவசாய மசோதா தாக்கலை எதிர்த்துப் போராடிய விவசாயிகள் பேரணியின் போது காரை நிறுத்தி இறங்கி வந்து சரண்ஜித் விவசாயிகளிடம் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தினார். ஓர் மாநில முதல்வர் மிகவும் எளிமையாக நடந்து கொள்கிறார் என அப்போது பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்தனர்.
பசுவை மீட்ட முதல்வர்
இதேபோல தற்போது சாக்கடையில் சிக்கிக்கொண்ட ஒரு பசுவை (Cow) பத்திரமாக மீட்டு எடுக்க நள்ளிரவில் சரண்ஜித் கையில் டார்ச் லைட் உடன் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார்.
இதுகுறித்து இவர் கருத்து தெரிவித்துள்ளார்.
சாக்கடையில் சிக்கிக்கொண்ட பசுவை பத்திரமாக மீட்க தான் உத்தரவிட்டுள்ளதாகவும் பசு பத்திரமாக மீட்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவரது இந்த செயல் பாராட்டைப் பெற்றுள்ளது.
மேலும் படிக்க
பசுஞ்சாணத்தில் உரம் தயாரிக்க மத்திய பிரதேச அரசு முடிவு!
நாட்டிலேயே முதல்முறையாக பசுக்களுக்கு ஆம்புலன்ஸ் சேவை: உ.பி.யில் அறிமுகம்!