Others

Friday, 03 December 2021 11:34 AM , by: Elavarse Sivakumar

Credit: Dinamalar

பழுதாகி நின்ற வாகனம் எதுவானாலும் அதனை தள்ளு, தள்ளு எனத் தள்ளிச் செல்வதைப் பார்த்திருக்கிறோம். ஆனால், விமானத்தைக்கூடத் தள்ளிச் சென்றார்கள் என்றால் நம்பமுடிகிறதா?

பழுதான விமானம்

சாலையில் பழுதாகி நிற்கும் கார், லாரி, பஸ் போன்ற வாகனங்களை கையால் தள்ளி பார்த்திருக்கிறோம். ஆனால் ஓடு தளத்தில் டயர் பஞ்சராகி நின்ற பயணிகள் விமானத்தை கைகளால் தள்ளிய சம்பவம் நேபாளம் நாட்டில் நிகழ்ந்துள்ளது.

பயணிகள் விமானம்

நேபாளம் நாட்டின் காத்மாண்ட் நகரை தலைமையிடமாகக் கொண்டது யீட்டி ஏர்லைன்ஸ். இந்த நிறுவனத்திற்குச் சொந்தமான பயணிகள் விமானம் , பஜூரா மாவட்டத்தில் உள்ள கோல்டி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்திறங்கியது.

டயர் வெடித்தது

அப்போது எதிர்பாராதவிதமாக விமானத்தின் பின்பக்க டயர் வெடித்தது. பஞ்சாராகி ஓடுதளத்தில் நடுவில் நின்றதால் விமானத்தை நகர்த்த முடியவில்லை. இந்நிலையில் அதே ஓடுதளத்தில் மற்றொரு விமானம் தரையிறங்க முயன்றது. ஆனால் அந்த விமானம் தரையிறங்க முடியவில்லை.

உடனே விமானத்தில் பயணித்த பயணிகள், விமான நிலைய ஊழியர்கள் என 20-க்கும் மேற்பட்டோர் விமானத்தை கைகளால் தள்ளி சென்றனர். இதன் வீடியோக் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது.

தள்ளிச் சென்றனர்

முன்னதாக மத்திய பிரதேச மாநிலம் ஹர்தா என்ற இடத்தில், கடந்த ஆகஸ்ட் மாதம் ரயில்வே வழித்தடத்தில் சென்ற ரயில் தொழில்நுட்ப கோளாறால் நடுவழியில் நின்றது. இதையடுத்து, ஒரு தண்டவாளத்தில் இருந்து மற்றொரு தண்டவாளத்திற்கு ரயில் பெட்டியை கைகளால் தள்ளிச் சென்றனர்.

எந்த வாகனமாக இருந்தால் என்ன, எதாவது ஒரு சூழலில் தள்ளிச் செல்ல வேண்டியது விதியாகிவிட்டதே.

மேலும் படிக்க...

அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாற வாய்ப்பு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)