இந்தியாவின் பணக்கார விவசாயி: RFOI விருதினை வென்ற குஜராத் பெண்! விவசாயத்தில் மட்டும் 50 கோடி.. RFOI விருதினை வென்ற யுவராஜின் வெற்றிக் கதை! நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 1 May, 2022 9:29 PM IST

நம் சம்பளத்தின் முதல் செலவு சேமிப்பாக இருக்க வேண்டும் என்று முன்னோர் கூறுவர். அவ்வாறு இருந்தால்தான் எதிர்காலம் என்பது நம் எண்ணத்தைப் பிரதிபலிப்பதாக, அமையும். அப்படி எதிர்காலத்திற்காக சேமிக்க விரும்புபவரா நீங்கள்? உங்கள் இலக்கை அடைய, இந்த தபால் அலுவலக சிறுசேமிப்புத் திட்டம் கைகொடுக்கும்.

பாதுகாப்பான முதலீட்டில் அதிக லாபம் தரும் திட்டம் என்றால், அது தபால் அலுவலக சிறு சேமிப்பு திட்டம்தான்.

ரிஸ்க் எடுத்து முதலீடு செய்வோர் பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் போன்றவற்றில் பணத்தை போடுவார்கள். ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள் பாதுகாப்பான சிறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வார்கள்.

​பொது வருங்கால வைப்பு நிதி

பொது வருங்கால வைப்பு நிதி (PPF) ஒரு சிறு சேமிப்பு திட்டமாகும். இத்திட்டத்தில் முதலீடு செய்தால் லாபத்துக்கு உத்தரவாதம் உண்டு.

​வட்டி (Interest)

தற்போது பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்துக்கு 7.1% வட்டி வழங்கப்பட்டு வருகிறது. குறைந்தபட்சமாக ஆண்டுக்கு 500 ரூபாய் இதில் முதலீடு செய்ய வேண்டும். அதிகபட்சமாக 1.5 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம்.

​மெச்சூரிட்டி

பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் மெச்சூரிட்டி காலம் 15 ஆண்டுகள். அதன்பின்பு 20 ஆண்டு அல்லது 25 ஆண்டு வரை நீட்டித்துக் கொள்ளலாம். மெச்சூரிட்டியின்போது மொத்த பணத்தையும் எடுத்துக் கொள்ளலாம்.

​லாபம்

இத்திட்டத்தில் 15 ஆண்டுகளுக்கு தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் 1000 ரூபாய் முதலீடு செய்து வந்தால் நீங்கள் டெபாசிட் செய்யும் மொத்த தொகை 1.80 லட்சம் ரூபாய். இதற்கு 7.1% வட்டி கிடைத்தால் 1.45 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கும். ஆக, 15 ஆண்டு இறுதியில் மொத்தமாக 3.25 லட்சம் ரூபாய் கிடைக்கும். 25 ஆண்டு வரை கணக்கை நீட்டித்தால் 8.24 லட்சம் ரூபாய் கிடைக்கும்.

​நான்காம் நீட்டிப்பு

உங்கள் பொது வருங்கால வைப்பு நிதியை 30 ஆண்டு வரை நீட்டித்தால் 12.36 லட்சம் ரூபாய் கிடைக்கும். மேலும், கணக்கை 35 ஆண்டு வரை நீட்டித்தால் 18.15 லட்சம் ரூபாய் கிடைக்கும்.

​எப்படி கணக்கு தொடங்குவது?

பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்ய விரும்புவோர் தபால் அலுவலகம் வாயிலாக கணக்கை தொடங்கலாம்.

மேலும் படிக்க...

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு ரூ.15,000 மானியம்!

தரித்திரம் தொற்றிக்கொள்ளும் செடிகள்- இவற்றை வளர்க்க வேண்டாம்!

English Summary: Put 1000 rupees per month - get 18 lakh profit!
Published on: 30 April 2022, 09:41 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now