Others

Friday, 25 February 2022 09:05 PM , by: R. Balakrishnan

Rare Radiation of the Sun

நிலவை ஆய்வு செய்வதற்காக, 'இஸ்ரோ' (ISRO) எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையம் அனுப்பியுள்ள, சந்திரயான் - 2 செயற்கைக் கோளில் உள்ள சாதனம், சூரியன் வெளிப்படுத்திய அபூர்வ கதிர்வீச்சு சம்பவத்தை பதிவு செய்துள்ளது. இஸ்ரோ அனுப்பியுள்ள சந்திரயான் - 2 செயற்கைக் கோள், நிலவை சுற்றி வந்து ஆய்வு செய்து வருகிறது. இந்த செயற்கைக் கோளில் பல்வேறு சாதனங்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

கிளாஸ்

அதன்படி, 'கிளாஸ்' எனப்படும் மிகப் பெரிய பகுதியை எக்ஸ்ரே கதிர்கள் வாயிலாக ஆய்வு செய்யக் கூடிய சாதனம், சமீபத்தில் ஒரு அபூர்வ நிகழ்வை பதிவு
செய்துள்ளது.

இது குறித்து, இஸ்ரோ வெளியிட்டு உள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: சூரியன் மிகவும் தீவிர தன்மையில் இருக்கும் போது, அதில் இருந்து வெப்பக் கதிர்கள், காந்தவிசை கதிர்கள் போன்றவை வெளிப்படும். அதிக கதிர்வீச்சு பாதிப்புகளை ஏற்படுத்தும் இந்த நிகழ்வு, கடந்த ஜனவரி 18ல் நடந்தது. இதை, 'கிளாஸ்' சாதனம் பதிவு செய்துள்ளது.

சூரிய வெளிச்சம் (Sun Light)

இதைத் தொடர்ந்து, சூரியக் கதிர்கள், அதிக காந்த சக்தியுடன் பூமியை நோக்கி பயணிக்கும். அப்போது, வானில் அதிக வெளிச்சம் ஏற்படும். இப்படி சூரியனில் மாற்றம் ஏற்பட்டு, அதிக காந்த சக்தி உடைய சூரிய கதிர்கள், பூமிக்கு வருவதற்கு குறைந்தபட்சம் இரண்டு நாட்களாகும். இந்த அபூர்வ நிகழ்வை, கிளாஸ் சாதனம் பதிவு செய்து உள்ளது.

மேலும் படிக்க

பூத்துக் குலுங்கும் சூரியகாந்தி மலர்கள்: மகிழ்ச்சியில் விவசாயிகள்!

உலகிலேயே மிக அழகான கட்டடம்: எதிர்கால அருங்காட்சியகம் திறப்பு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)