ரேசன் அட்டைதாரர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை வழங்குவதற்கு ஆயுஷ்மான் கார்டுகள் வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ் ஆயுஷ்மான் கார்டு வைத்திருக்கும் பயனாளிகள் நாடு முழுவதும் இலவசமாக மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம்.
அந்தோதயா ரேசன் அட்டை
உங்களிடம் அந்தோதயா ரேசன் அட்டை இருந்தாலே இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். இதற்கு ரேசன் அட்டைதாரர்கள் ஆயுஷ்மான் கார்டு வாங்கிவிட்டால் போதும்.
ஆயுஷ்மான் கார்டு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
அந்தோதயா ரேசன் அட்டைதாரர்கள் ஆயுஷ்மான் கார்டு பெற்றுக்கொள்ளலாம். பொது சேவை மையங்கள் வாயிலாக இந்த கார்டு பெற விண்ணப்பிக்கலாம். மத்திய, மாநில அரசு திட்டங்களின் கீழ் இலவச ரேசன் பெற்றிருந்தாலே ஆயுஷ்மா கார்டு திட்டத்தின் கீழ் இலவச மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு நீங்கள் தகுதியானவர்கள். அந்தோதயா ரேசன் அட்டை வைத்திருக்கும் அனைவரும் ஆயுஷ்மன் கார்டு பெறலாம்.
இத்திட்டத்தின் கீழ், ஆயுஷ்மான் கார்டு வைத்திருப்பவர்கள் நாடு முழுவதும் இத்திட்டத்துடன் இணைக்கப்பட்ட மருத்துவமனைகளில் இலவசமாக மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். அந்தோதயா திட்டத்தின் கீழ் பயன்பெறாதவர்களால் ஆயுஷ்மான் கார்டு பெற முடியாது.
மேலும் படிக்க
ஜான்சன் பேபி பவுடருக்கு தடை: அரசின் அதிரடி நடவடிக்கை!
அரசு பணியாளர்களுக்கு ஜாக்பாட்: நவராத்திரியில் அகவிலைப்படி உயர்வு!