Others

Thursday, 28 April 2022 08:55 PM , by: Elavarse Sivakumar

இலவச ரேஷன் பொருட்களை பெறும் தகுதியில்லா நபர்கள் உடனடியாக ரேஷன் கார்டை ஒப்படைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும், ஒப்படைக்கத் தவறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

​இலவசப் பொருட்கள்

கடந்த 2 ஆண்டுகளாகக் கொடூரக் கொரோனா இந்தியாவின் பல மாநிலங்களை வாட்டி வதைத்தது. இதனைக் கருத்தில்கொண்டும், நோய்பரவலைத் தடுக்கும் வகையிலும், நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கால் ஏழை எளிய மக்கள் சாப்பாடு இன்றிப் பஞ்சத்தில் சிக்கிவிடக்கூடாது என்பதைக் கருத்தில்கொண்டு, இலவசமாக ரேஷன் பொருட்களை வழங்கியது மத்திய அரசு.

தகுதியில்லா நபர்கள் (Ineligible persons)

இந்நிலையில், தகுதியில்லாத ஏராளமான ரேஷன் கார்டுதாரர்கள் இலவசமாக ரேஷன் பொருட்களை பெற்று வருவதாக மத்திய அரசுக்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து, தகுதியில்லாத நபர்களுக்கு ரேஷன் பொருட்கள் இலவசமாக செல்வதை தடுக்க மத்திய அரசு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது.

​எச்சரிக்கை (Warning)

தகுதியில்லாத நபர்கள் உடனடியாக தங்கள் ரேஷன் கார்டுகளை சரண்டர் செய்ய வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தகுதியில்லாத நபர்கள் ரேஷன் கார்டு வைத்துக்கொண்டு இலவசமாக ரேஷன் பொருட்களை பெற்றால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது.
வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு பிரத்யேக ரேஷன் கார்டு வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு 10,000 ரூபாய்க்கு கீழ் வருமானம் பெறுவோருக்கு மட்டுமே இந்த ரேஷன் கார்டு வழங்கப்படும்.

சரண்டர் (Surrender)

100 சதுர சிட்க்கு மேல் நிலம், வீடு, ஃபிளாட், கார், டிராக்டர் வைத்திருப்போர், கிராமங்களில் 2 லட்சம் ரூபாய்க்கு மேலும், நகரங்களில் 3 லட்சம் ரூபாய்க்கு மேலும் வருமானம் ஈட்டுவோர் அனைவரும் தங்கள் ரேஷன் கார்டை சரண்டர் செய்ய வேண்டும்.

மேலும் படிக்க...

டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ.500 - அமைச்சர் தகவல்

தேர்த்திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து விபத்து - 11 பேர் உடல் கருகி பலி!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)