ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவரும் தங்களது ஆதார் அட்டையை இதனுடன் இணைக்க வேண்டும். இல்லாவிட்டால் இனிமேல் ரேஷன் பொருட்களைப் பெற முடியாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏழை எளிய மக்களின் நிதிச்சுமையைக் குறைக்கவும், விலைவாசியால் அவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக அரசு பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இதன் ஒருபகுதியாக அமலில் உள்ள ரேஷன் அட்டைத் திட்டம்.
குறிப்பாக, ஏழை எளிய மக்களுக்கு உணவு தானியங்களை மலிவு விலையிலும் இலவசமாகவும் வழங்குவதற்காக ரேஷன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் தகுதியுள்ள குடும்பங்களுக்கு ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகின்றன.
திருமணம் ஆன பின்னர் தனியாக அந்த குடும்பத்துக்கு ரேஷன் கார்டு வாங்கிக் கொள்ளலாம். ரேஷன் கார்டு இருந்தால் மட்டுமே அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெறமுடியும். உணவு தானியங்கள் மட்டுமல்லாமல் அரசிடமிருந்து அவ்வப்போது நிதியுதவியும் கிடைக்கிறது.
ஒரே நாடு ஒரே ரேஷன்
இதன் தொடர்ச்சியாக மத்திய அரசு ஒரே நாடு ஒரே ரேஷன் என்ற திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு உதவுவதைக் கருத்தில் கொண்டே, இந்தத் திட்டம் நடைமுறைப் படுத்தப்படுகிறது. நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களிளும் இத்திட்டம் இன்னும் முழுவதுமாக அமலுக்கு வரவில்லை. நம்மிடம் உள்ள ரேஷன் கார்டை வைத்து வேறு எந்த ரேஷன் கடையிலும் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என்பதே இதன் சிறப்பு அம்சம்.
ஆதாருடன் இணைக்க
இந்நிலையில் ரேஷன் அட்டைதாரர்கள் அனைவரும் தங்களது ஆதார் கார்டை அதனுடன் இணைக்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. இல்லாவிட்டால் உணவு தானியங்களையும் நலத்திட்ட உதவிகளையும் பெறுவதில் சிக்கல் ஏற்படும்.
காலக்கெடு
ரேஷன் கார்டு மற்றும் ஆதார் கார்டை இணைப்பதற்கான கடைசி தேதி காலக்கெடு ஜூன் 30ஆம் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளதாக, உணவு மற்றும் பொது விநியோக துறை தெரிவித்துள்ளது. ஒருவேளை நீங்கள் இன்னும் ரேஷன் கார்டை ஆதாருடன் இணைக்காமல் இருந்தால் 2022 ஜூன் 30ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும்.
இணைப்பது எப்படி?
-
ஆதார் கார்டை ரேஷன் கார்டுடன் இணைப்பதற்கு ஒரிஜினல் ரேஷன் கார்டு, ரேஷன் கார்டு ஜெராக்ஸ், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, குடும்ப உறுப்பினர்களின் ஆதார் ஜெராக்ஸ் ஆகியவை தேவை.
-
இந்த ஆவணங்களைக் கொண்டு uidai.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று இணைக்கலாம்.
-
தேவையான விவரங்களைப் பூர்த்தி செய்து, உங்களுடைய மொபைல் நம்பருக்கு வரும் ஓடிபி நம்பரைப் பதிவிடுவதன் மூலம் எளிதாக இணைத்துவிடலாம்.
மேலும் படிக்க...