நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல் - ஜூன்) நிகழ்ந்த வங்கி மோசடிகள் குறித்த விவரங்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி, கோட்டக் மஹிந்த்ரா வங்கியில்தான் (Kotak Mahindra Bank) அதிகபட்சமான மோசடிகள் நடந்துள்ளன. மறுபுறம், இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ வங்கியில் (SBI) வெறும் 9 மோசடிகள் மட்டுமே நடந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. கோட்டக் மஹிந்த்ரா வங்கியில் 5,278 மோசடிகள் நடந்துள்ளன.
வங்கி மோசடி (Bank Frauds)
எந்த வகையான மோசடி, ஒவ்வொரு மோசடியிலும் எவ்வளவு தொகை போன்ற விவரங்களை ரிசர்வ் வங்கி வெளியிடவில்லை. எனினும், கோட்டக் மஹிந்த்ரா வங்கியில் வெறு மூன்று மாதங்களில் 5200-க்கும் மேற்பட்ட மோசடிகள் நடந்துள்ளது முக்கிய பிரச்சினையாக பார்க்கப்படுகிறது.
மற்ற தனியார் வங்கிகளை பொறுத்தவரை எச்டிஎஃப்சி வங்கியில் 303 மோசடிகளும், இண்டஸ் இண்ட் வங்கியில் 200 மோசடிகளும், ஆக்சிஸ் வங்கியில் 195 மோசடிகளும், ஆர்பிஎல் வங்கியில் 150 மோசடிகளும் நடந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
பொதுத்துறை வங்கிகளை பொறுத்தவரை பெரும்பாலான வங்கிகளில் மிக குறைவான அளவு மோசடிகளே நடந்துள்ளன. இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 31 மோசடிகளும், சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் 19 மோசடிகளும் நடந்துள்ளன.
எஸ்பிஐ வங்கியில் ஒன்பது மோசடிகள் மட்டுமே நடந்துள்ளன.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் 8 மோசடிகளும், பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் ஐந்து மோசடிகளும், இந்தியன் வங்கியில் மூன்று மோசடிகளும், பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா வங்கியில் இரண்டு மோசடிகளும், பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் இரண்டு மோசடிகளும் நடந்துள்ளன.
மேலும் படிக்க
ஜெயலலிதா பயன்படுத்திய கார் யாருக்கு கிடைக்கப் போகுது!
ஃபிக்சட் டெபாசிட் வட்டி உயர்வு: இந்தியன் வங்கி வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி!