Others

Saturday, 08 October 2022 07:54 AM , by: R. Balakrishnan

e-Rupee

ரிசர்வ் வங்கி ஏற்கெனவே டிஜிட்டல் ரூபாய் நாணயத்தை அறிமுகப்படுத்துவதற்கான பணிகளில் ஈடுபட்டிருந்தது. இந்நிலையில், குறிப்பிட்ட சில பயன்பாடுகளுக்கு மட்டும் இ-ரூபாய் (e-rupee) டிஜிட்டல் ரூபாய் நாணயம் சோதனை அடிப்படையில் வெளியிடப்படும் என ரிசர்வ் வங்கி இன்று தெரிவித்துள்ளது.

இ-ரூபாய் (e-Rupee)

இ-ரூபாய் டிஜிட்டல் நாணயம் பற்றிய குறிப்பையும் (Concept Note) ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்டுள்ளது. மத்திய வங்கி டிஜிட்டல் நாணயங்கள் (CBDC) பற்றியும், இ-ரூபாயில் திட்டமிடப்பட்டுள்ள வசதிகள் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவே இந்த குறிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. தொழில்நுட்பம், வடிவமைப்பு, பயன்பாடு, வெளியீடு உள்ளிட்டவை குறித்தும் இந்த குறிப்பில் விவாதிக்கப்பட்டுள்ளது. இ-ரூபாயால் வங்கி அமைப்பில் ஏற்படும் பாதிப்புகள், பணக் கொள்கை, நிதி நிலை, தனியுரிமை விவகாரங்கள் குறித்தும் இந்த குறிப்பு விவாதிக்கிறது.

இதுபோக, குறிப்பிட்ட சில பயன்பாடுகளுக்கு மட்டும் சோதனை அடிப்படையில் இ-ரூபாய் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. சோதனை திட்டம் விரிவடைய விரிவடைய, இ-ரூபாயின் சிறப்பு அம்சங்கள் மற்றும் பயன்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கியின் இ-ரூபாய் குறிப்பில் உள்ள முக்கிய தகவல்கள்:

  1. இ-ரூபாய் என்பது ரிசர்வ் வங்கியால் வழங்கப்படும் இறையாண்மை கொண்ட நாணயம்.
  2. இ-ரூபாய் என்பது பரிவர்த்தனைகளுக்கும், சட்ட முறை பணமாகவும், குடிமக்கள் சேமித்து வைத்துக்கொள்ளவும், நிறுவனங்கள் மற்றும் அரசு ஏஜென்சிகள் பயன்படுத்தவும் முடியும்.
  3. இ-ரூபாயை மாற்றி நிஜ ரூபாயாகவும் பெற்றுக்கொள்ளலாம்.
  4. இ-ரூபாயை பயன்படுத்த வங்கிக் கணக்கே தேவையில்லை.
  5. இதனால் காகித நாணயங்களின் பயன்பாடு குறையும். எனவே, காகித நாணயங்களை அச்சிடுவதற்கான செலவுகளும் குறையும்.
  6. இ-ரூபாய் மீதான சைபர் அச்சுறுத்தல்களும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க

PF வட்டி எப்போது கிடைக்கும்? வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

அரசுப் பணியாளர்களுக்கு GPF வட்டி: மத்திய அரசு அறிவிப்பு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)