கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளின் தரவுகளை பாதுகாக்கும் வகையிலான, டோக்கனைசேஷன்' வழிமுறைக்கான காலக்கெடுவை, மேற்கொண்டு மூன்று மாதங்களுக்கு நீட்டித்து, செப்டம்பர் 30ம் தேதி கடைசி என, ரிசர்வ் வங்கி அறிவித்திருப்பது குறிப்பிடதக்கது.
டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகள் வாயிலாக பொருட்களை வாங்கும் போது, அல்லது பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும்போது, கார்டுகளின் விபரங்களை வணிகங்கள் சேமித்து வைத்துக் கொள்கின்றன.
இவற்றை தடுப்பதற்காக, டோக்கனைசேஷன் எனும் வழிமுறையை ரிசர்வ் வங்கி வகுத்து கடந்த ஆண்டு அறிவித்தது. மேலும், நடப்பாண்டு ஜனவரி முதல் தேதியிலிருந்து, இது கட்டாயமாக்க உள்ளதாகவும் அறிவித்திருந்தது. ஆனாலும், வணிகங்கள் போதுமான அவகாசம் இல்லை என கோரிக்கை வைத்ததை அடுத்து, ஜூலை முதல் தேதியிலிருந்து கட்டாயம் என அறிவிக்கப்பட்டது.
ஆனாலும், இன்னும் சிறு வணிகங்கள் தொழில் நுட்ப ரீதியாக தயாராகாததால், காலக்கெடுவை செப்டம்பர் 30ம் தேதிக்கு நீட்டித்து அறிவித்துள்ளது, ரிசர்வ் வங்கி.
மேலும் படிக்க:11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு.. டவுன்லோட் லிங்க் இதோ!
கார்டுகளின் விபரங்களை பாதுகாக்கும் வகையிலான, தனி அடையாளப்படுத்தும் முறை தான் டோக்கனைசேஷன் என்பது. அதாவது, கார்டின் எண், சி.வி.வி. எண், காலவதி ஆகும் நாள் போன்றவற்றை கொடுக்காமல், தனி அடையாள எண்ணை கொண்டு கார்டை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த 'டோக்கன் எண்' அவ்வப்போது மாற்றி அமைக்கப்படும். இதனால் நமது தரவுகள் பாதுகாப்பாக இருக்கும். வணிக நிறுவனங்கள் நம் தரவுகளை அவர்களது சரிவரில் சேமிக்க முடியாது என்பது குறிப்பிடதக்கது.
மேலும் படிக்க: