சூரியனில் கரும்புள்ளிகள் அதிகரிக்க தொடங்கி உள்ளதால் பூமியின் வெப்பநிலை அதிகரிக்கும் நிலையில் வரும் நாட்களில் இதன் வீரியம் அதிகரித்து, சூரியகாந்த புயலாக மாறி பூமிக்கு வர வாய்ப்புள்ளதாக வானியற்பியல் விஞ்ஞானி குமரவேல் தெரிவித்தார். கொடைக்கானலில் அவர் கூறியதாவது: 11 ஆண்டுகளுக்கு ஒருமுறை சூரியனில் கரும்புள்ளிகள் தோன்றும். இதுபற்றி நாசா விஞ்ஞானிகள், நடப்பாண்டில் அதிகளவு காந்த புயல் வீசக்கூடும்.
சூரிய காந்தப்புயல் (Solar magnetic storm)
சூரிய காந்தப்புயலால் விண்வெளியில் சேட்டிலைட், அலைபேசி அலைவரிசை பாதிக்கலாம் என எச்சரித்தனர். இதையடுத்து கொடைக்கானல் வானியற்பியல் மையத்தில் சூரியனை நான்கு தொலைநோக்கிகள் உதவியுடன் விஞ்ஞானிகள் கண்காணிக்கின்றனர். சில நாட்களாக சூரியனில் கரும்புள்ளிகள் அதிகளவு தோன்றி வருவதால் இனி வரும் நாட்களில் இதன் வீரியம் அதிகரித்து சூரியகாந்த புயலாக மாறி பூமிக்கு வரும் வாய்ப்புள்ளது.
இதனால் பூமியின் வெப்பநிலை அதிகரிக்கும்.
சூரியனை இனிவரும் நாட்களில் அதிக அளவு கண்காணிக்க மையத்தில் முடிவு செய்துள்ளோம், என்றார்.
மேலும் படிக்க
பருத்தி இறக்குமதி செய்ய ஜவுளி அமைப்புகள் வேண்டுகிறேன்!
அடுத்த 3 நாட்களுக்கு வெப்ப நிலை உயரும்: வானிலை ஆய்வு மையம் தகவல்!