4500 ரூபாய் செலுத்தினால் 10 லட்சம் ரூபாய் கிடைக்கும் என சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவலால் மக்களிடையே ஒருவிதப் பரபரப்புத் தொற்றிக் கொண்டுள்ளது.
சுயத் தொழில்
தனியார் நிறுவனத்தில் வேலை பார்ப்பது ஒரு விதம். ஆனால் நம்மில் சிலருக்கு தொழில் செய்யும் யோகம் இருக்கும். அப்படித் தொழில் தொடங்க விரும்புவோருக்காக மத்திய அரசு முத்ரா கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. சிறு தொழில் தொடங்க விரும்புவோர் முத்ரா கடன் திட்டத்தின் கீழ் கடன் பெறலாம். குறிப்பாக தொழில் தொடங்க விரும்பும் இளைஞர்கள் முத்ரா கடன் பெற அதிகம் முயற்சிக்கின்றனர்.
இந்நிலையில், முத்ரா கடன் திட்டத்தின் பெயரில் மோசடி கும்பல்கள் பணத்தை கொள்ளை அடிக்க முயற்சித்து வருவது தெரியவந்துள்ளது.
அதாவது, 4500 ரூபாய் செலுத்தினால் 10 லட்சம் ரூபாய்க்கு முத்ரா கடன் கிடைக்கும் என சில கும்பல்கள் இமெயில் மற்றும் மெசேஜ்களை பரப்பி வருகின்றன.இத்தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
விளக்கம்
இந்நிலையில், இது ஒரு பொய்யான தகவல் என மத்திய அரசு தரப்பில் தெளிவுபடுத்தியுள்ளது. 4500 ரூபாய் செலுத்தினால் 10 லட்சம் ரூபாய் முத்ரா கடன் கிடைக்கும் என பரவி வரும் தகவல் போலியானது என மத்திய அரசின் கீழ் இயக்கி வரும் பத்திரிகை தகவல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பத்திரிகை தகவல் அலுவலகம் ட்விட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், “4500 ரூபாய் வெரிஃபிகேஷன் மற்றும் பிராசஸிங் கட்டணமாக செலுத்தினால் பிரதமர் முத்ரா கடன் திட்டத்தின் கீழ் 10,00,000 ரூபாய் கிடைக்கும் என தகவல் பரவி வருகிறது. இது ஒரு போலியான தகவல். இந்தக் கடிதத்தை நிதியமைச்சகம் வெளியிடவில்லை” என்று தெரிவித்துள்ளது.
சமீபத்தில் இப்படி பல்வேறு போலியான தகவல்களை அரசு பேரிலும், வங்கிகள் பேரிலும் மோசடி கும்பல்கள் பரப்பி வருகின்றன. இதுகுறித்து எச்சரிக்கையாக இருக்கும்படி மத்திய அரசு தொடர்ந்து எச்சரித்து வருகிறது.
மேலும் படிக்க...
ரூ.1லட்சம் பென்சன் தரும் மத்திய அரசின் மகத்தானத் திட்டம்!
நீரிழிவு நோயை தடுக்கும் பழைய சோறு - யாரும் அறிந்திராத உண்மை!