Others

Tuesday, 05 April 2022 11:29 AM , by: Elavarse Sivakumar

கணவனை இழந்துவிட்ட நிலையில், குடும்பச் செல்வுகளை எதிர்கொள்ளப் படாத பாடுபடும் பெண்களின் கஷ்டத்தைக் கருத்தில்கொண்டு, மத்திய அரசு விதவைகளுக்கு ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் விதவைப் பெண்கள் மாதம் 2500 ரூபாய் பெற முடியும். அரசின் இந்தத் திட்டத்திற்கு மகளிரிடையே அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

பெண்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அதில் மிக முக்கியமான ஒரு திட்டம்தான் வித்வா பென்சன் யோஜனா. விதவைப் பெண்களுக்கு உதவுவதற்காக இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசு இத்திட்டத்தைச் செயல்படுத்தி வந்தாலும் இதற்கான தொகை மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது. இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் விதவைப் பெண்களுக்கு ஓய்வூதியம் கிடைக்கும்.

18 முதல் 60 வயது வரை உள்ள விதவை பெண்களுக்கு இத்திட்டத்தின் பயன் கிடைக்கும். கணவனை இழந்து பொருளாதார ரீதியாக மிகவும் சிரமப்படும் பெண்களுக்கு உதவுவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

தகுதி

இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கசில தகுதிகள் இருக்க வேண்டும்.
இந்தத் திட்டம் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள பெண்களுக்கு மட்டுமே.
வேறு எந்த ஓய்வூதியத் திட்டத்தையும் பயன்படுத்தாத பெண்களுக்கு இத்திட்டத்தின் பலன் வழங்கப்படுகிறது.விண்ணப்பிக்கும் பெண்களின் வயது வரம்பு 18 முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேவைப்படும் ஆவணங்கள்

  • ஆதார் அட்டை

  • கணவரின் இறப்புச் சான்றிதழ் பாஸ்போர்ட் அளவு புகைப்படம்

  • இருப்பிட சான்றிதழ்

  • வங்கிக் கணக்கு எண்

  • வயது சான்றிதழ்

  • வருமான சான்றிதழ்

விதவை ஓய்வூதியத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் போது விண்ணப்பதாரர் மேலேக் கூறிய அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

எவ்வளவுத் தொகை?

விதவை ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித் தொகை மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது.விதவைப் பெண்களுக்கு ஹரியானா அரசால் ஒவ்வொரு மாதமும் ரூ.2,250 பென்சன் வழங்கப்படுகிறது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள விதவைப் பெண்களுக்கு ஒவ்வொரு மாதம் 300 ரூபாய் பென்சன் வழங்கப்படுகிறது. மகாராஷ்டிர மாநிலத்தில் ரூ.900, டெல்லியில் ரூ.2,500மும், ராஜஸ்தான் மாநிலத்தில் ரூ.750மும், உத்தராகண்டில் ரூ.1,200, குஜராத்தில் ரூ.1,250மும் ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித்தொகை நேரடியாக பயனாளியின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது. ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்குக் குறைவாக உள்ள பெண்களுக்கு மட்டுமே இந்த உதவி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க...

புற்றுநோய், சுகர் என பல நோய்க்குத் தீர்வு வேண்டுமா? இந்த ஒரு இலையே போதும்!

விமான நிலையத்தில் விற்பனை மையம் அமைக்க சூப்பர் வாய்ப்பு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)