Others

Monday, 21 November 2022 06:11 PM , by: Elavarse Sivakumar

நாட்டில் ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்கு தலா 4.78 லட்சம் ரூபாயை மத்திய அரசு கடனாக வழங்கவிருப்பதாக சமூக ஊடங்களில் வேகமாகத் தகவல் பரவி வருகிறது. இதனால், ஆதார் அட்டை தாரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மோடி புகைப்படத்துடன்

ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்கு மத்திய அரசு லட்சக்கணக்கில் கடன் வழங்கவிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தை இணைத்து சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

உண்மையில்லை

இதில் துளியும் உண்மையில்லை என்று பிஐபி (PIB) அறிவித்துள்ளது. தவறான தகவல் இணையதளங்களில் பரவி வருவதாகவும், அது உண்மையில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.

குற்றம்

தயவுகூர்ந்து இதுபோன்ற பொய்யான தகவல்களை மக்கள் யாரும் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என்றும், இதுபோன்ற புரளிகளைப் பரப்புவதும் குற்றம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எச்சரிக்கை

இதுபோன்ற புரளிகள் பரவும் போது, இதனை உண்மை என நம்பும் மக்கள், மத்திய அரசு வங்கியிலிருந்து அழைப்பதாகக் கூறினால் அப்படி மக்கள் தங்களது ஆதார் உள்ளிட்ட விவரங்களை அளித்து ஏமாறும் அபாயம் இருக்கிறது. எனவே, புரளிகளைப் பரப்புவதும் யாரேனும் தொலைபேசி வாயிலாக அழைத்தால் அவர்களிடம் ஆதார் எண் உள்ளிட்ட எந்த விவரங்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளது.

பிஐபியின் உண்மை அறியும் சமூக ஊடகப் பக்கம், இதுபோன்று பரவும் தவறான தகவல்கள் குறித்து விளக்கங்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறது. இதுபோன்ற ஒரு தகவல் கடந்த ஆகஸ்ட் மாதமும் பரவியது. அப்போதும் இந்தப் பக்கத்தில் அது பொய்யானது என்று விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது. தற்போதும் இது குறித்து பதிவிட்டுள்ளது.

மேலும் படிக்க...

ஜெயலலிதா மரணம்: விசாரிக்கிறதா சிபிஐ?- சிக்குகிறார்கள் அவர்கள்!

சயனைடை விட 6,000 மடங்கு - அதிக நச்சுள்ள உலகின் கொடிய தாவரம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)