அரசு ஊழியர்களுக்கு கணினி அட்வான்ஸாக 50,000 ரூபாய் வழங்கப்படும் என மத்திய அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைக் கம்பியூட்டர் அட்வான்ஸாகப் பயன்படுத்திக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கணினி மயம்
அரசு ஊழியர்கள் இதனைப் பயன்படுத்தி ஐபேட் வாங்கிக்கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்காகவே 50,000 ரூபாய் அட்வான்ஸ் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு அனைத்துத் துறைகளிலும் டிஜிட்டல் மற்றும் கணினிமயத்தை மேம்படுத்தி வருகிறது. இதன் ஒருபகுதியாக அரசு ஊழியர்கள் அதி நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திக்கொள்வதை ஊக்குவிக்க மத்திய அரசு முன்வந்துள்ளது.
இதன் ஒருபகுதியாக மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும் தனிநபர் கணி வாங்குவதற்காக 50,000 ரூபாய் வரை அட்வான்ஸ் தொகை வழங்கப்படுகிறது. இதற்கான விதிமுறைகள் 2016 அக்டோபர் மாதம் நிதியமைச்சகத்தால் திருத்தப்பட்டது. இந்த சலுகையை அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
நிதியமைச்சகம் விளக்கம்
இந்நிலையில், கணினி வாங்குவதற்கு வழங்கப்படும் அட்வான்ஸ் தொகையை வைத்து மத்திய அரசு ஊழியர்கள் ஐபேட் (iPad) வாங்கிக்கொள்ளலாம் என மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. இதன்படி, இனி மத்திய அரசு ஊழியர்கள் ஐபேட் வாங்குவதற்கு கணினி அட்வான்ஸ் தொகையை பயன்படுத்தலாம்.
கணினி அட்வான்ஸ் தொகை பயன்படுத்தி ஐபேட் வாங்கலாமா என அரசு ஊழியர்கள் தரப்பில் விளக்கம் கேட்கப்பட்டு வருவதாகவும், இதையடுத்து கணினி அட்வான்ஸ் பயன்படுத்தி அரசு ஊழியர்கள் ஐபேட் வாங்கிக்கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், ஐபேடுகள் (iPads) தனிநபர் கணினி என்ற வரையறைக்குள் வருவதாகவும் மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க...