Others

Monday, 20 December 2021 10:40 AM , by: Elavarse Sivakumar

ஜிஎஸ்டி அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விரைவில் ஆட்கள் நியமிக்கப்பட உள்ளதால், தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு (Employment)

சென்னையில் உள்ள ஜிஎஸ்டி அலுவலகத்தில் காலியாக உள்ள வரி உதவியாளர், சுருக்கெழுத்தர் போன்ற பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி:Tax Assistant

காலியிடங்கள்: 13

சம்பளம் (Salary)

மாதம் ரூ.25,500 - 81,100

கல்வித் தகுதி (Education Qualification)

ஏதாவதொரு பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஒரு மணி நேரத்தில் 8000 எழுத்துக்கள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Stenographer Gr-II

காலியிடங்கள்: 02

சம்பளம்(Salary)

மாதம் ரூ.25,500 - 81,100

கல்வித் தகுதி (Education Qualification)

  • பிளஸ் 2 தேர்ச்சியுடன் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் என்ற வேகத்தில் 10 நிமிடங்கள் சுருக்கெழுத்து எழுதி அதனை 50 நிமிடத்தில் விரிவாக தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

  • ஆங்கிலத்தில் 50 நிமிடத்திலும், ஹிந்தியில் 65 நிமிடத்திலும் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

பணி :Havaldar

காலியிடங்கள்: 03

சம்பளம் (Salary)

மாதம் ரூ.18,000 - 56,900

கல்வித் தகுதி (Education Qualification)

  • பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் குறைந்தபட்சம் 157.5 செ.மீ உயரம், மார்பளவு 81 செ.மீ அகலம், 5 செ.மீ சுருங்கி விரியும் தன்மையுடன் இருக்க வேண்டும்.

  • பெண்கள் குறைந்தபட்சம் 156 செ.மீ உயரம், 48 கிலோ எடை இருக்க வேண்டும். 

பணி: Multi Tasking Staff

காலியிடங்கள்: 01

சம்பளம் (Salary)

மாதம் ரூ.18,000 - 56,900

கல்வித் தகுதி (Education Qualification)

10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு (Age limit)

31.12.2021 தேதியின்படி 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும்

தேர்வு செய்யப்படும் முறை (Selection)

விளையாட்டு தகுதிகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை (How to apply)

www.centralexcisechennai.gov.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி (Address)

The Additional Commissionat-CCA,

GST & Central Excise,

Tamilnadu & Puducherry Zone,

GST Bhavan,

Nungampakkam,

Chennai

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:

31.12.2021

மேலும் படிக்க...

உங்களுடைய ஆதார் கார்டு தொலைந்துவிட்டதா? கவலைய விடுங்க இதைப் பண்ணுங்க!

உலகில் 100% காகிதமில்லா முதல் அரசானது துபாய்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)