Others

Thursday, 17 March 2022 09:56 AM , by: Elavarse Sivakumar

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நாளைத் தாக்கல் செய்யப்பட உள்ள தமிழக அரசின் பட்ஜெட்டில் இந்த அறிவிப்பு இடம்பெறும் எனத் தெரிகிறது.

கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் பொதுத் தேர்தலின்போது, திமுக கட்சி ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அறிவித்திருந்ததது. அதன்படி திமுக ஆட்சிக்கு வந்து 9 மாதங்கள் ஆகியும்தேர்தலில் அளித்த வாக்குறுதிப்படி இதுவரை குடும்பத் தலைவிகளுக்கான ரூ.1,000யை திமுக அரசு வழங்கவில்லை. இதனைச் சுட்டிக்காட்டியே எதிர்க்கட்சிகள் ஆளுங்கட்சியை விமர்சித்து வருகின்றன.

இந்த நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் (நிதிநிலை அறிக்கை) நாளைத் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதனை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை தாக்கல் செய்கிறார். இது ஸ்டாலின் அரசு தாக்கல் செய்யும் முழுமையான முதல் பட்ஜெட் ஆகும். இதில், குடும்பத் தலைவிகளுக்காக வழங்கப்படும் மாதம் ரூ.1000 குறித்த அறிவிப்பும் இடம்பெற உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஸ்டாலின் படத்துடன்

இதனை முன்னிட்டு, உரிமைத் தொகைக்கான விண்ணப்பம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படத்துடன் கூடிய விண்ணப்பங்கள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. அதில், தமிழக அரசின் ஏழைக் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 உதவித் தொகைக்கான விண்ணப்பம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல் கடை எண், குடும்பத் தலைவி பெயர், முகவரி, தொலைபேசி எண், ஆதார் எண், குடும்ப உறுப்பினர் எண்ணிக்கை, குடும்ப அட்டை வகை, குடும்ப அட்டை எண், வங்கிக் கணக்கு எண், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவரா? ஆம் எனில் பிபிஎல் பட்டியல் எண் ஆகியவை கோரப்பட்டுள்ளது. அதன் கீழ், குடும்ப அட்டைதாரர் விவரம் குறிப்பிடப்பட்டு, ரூ.1000 பெற தகுதி பெறுகிறாரா, இல்லையா என்று விண்ணப்பத்தை சரிபார்த்து சான்றளிப்பவர் கையொப்பமிடும் இடமும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

மாரடைப்பைத் தடுக்கும் பழம்- தினமும் ஒன்று சாப்பிட்டால் போதும்!

தினமும் நடைபயிற்சி - அசத்தலான 8 நன்மைகள்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)