Others

Friday, 16 September 2022 01:50 PM , by: Elavarse Sivakumar

வீடுகளுக்குப் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு 200 ரூபாய் மானியமாக வழங்க மத்திய அரசு முன்வந்துள்ளது. இதற்காக, மத்திய அரசு ரூ.30,000 கோடியை ஒதுக்கியுள்ளது.

சமையல் சிலிண்டர்

நாட்டு மக்கள் அனைவருக்குமே சுகாதாரமான சமையல் எரிவாயு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் உஜ்வாலா யோஜனா திட்டம் மத்திய அரசால் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு இலவச சிலிண்டர் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனால் நாட்டு மக்கள் அனைவரும் விறகு அடுப்புகளைக் கைவிட்டு சமையல் எரிவாயு முறைக்கு மாறி வருகின்றனர்.

சிலிண்டருக்கு மானியம்

சிலிண்டர் விலை அதிகமாக இருப்பதால் பொதுமக்களின் நிதிச் சுமையைக் குறைப்பதற்காக மத்திய அரசிடமிருந்து சிலிண்டருக்கு மானியம் வழங்கப்படுகிறது. இந்த மானியத் தொகை நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்கிலேயே செலுத்தப்படுகிறது. முதலில் சிலிண்டருக்கான முழுத் தொகையையும் கொடுத்து சிலிண்டர் வாங்க வேண்டும். அதன் பிறகு மானியத் தொகை வங்கிக் கணக்கில் வந்து சேரும்.

எவ்வளவு மானியம்?

தற்போதைய நிலையில் வருடத்துக்கு 14.2 கிலோ எடை கொண்ட 12 சிலிண்டர்களுக்கு அரசு தரப்பிலிருந்து மானியம் வழங்கப்பட்டு வருகிறது. சிலிண்டருக்கான மானியத் தொகை என்பது வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறாக உள்ளது. பெரும்பாலானோருக்கு 37 ரூபாய் மானியமாக கிடைக்கிறது.

மானியம் நிறுத்தம்

2020ஆம் ஆண்டில் கொரோனா பிரச்சினை வந்தபோது அரசின் வரி வருவாய் குறைந்து செலவுகள் அதிகரித்ததால் மானியப் பலன்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. அதன் பிறகு மீண்டும் மானியம் வழங்கப்பட்டது.

உயருகிறது மானியம்

இந்நிலையில், சமையல் எரிவாயு சிலிண்டருக்கு 200 ரூபாய் மானியம் வழங்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

யாருக்கு கிடைக்கும்?

மத்திய அரசின் இந்த மானிய அறிவிப்பு ஒரு சிலருக்கு மட்டுமே பயனளிக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது, உஜ்வாலா திட்டத்தின் பயனாளிகள் மட்டுமே அரசின் இந்த சலுகையைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். மேலும், ஒரு வருடத்தில் 12 சிலிண்டர்களுக்கு மட்டுமே 200 ரூபாய் மானியம் கிடைக்கும்.

கூடுதல் நிதி ஒதுக்கீடு

சிலிண்டருக்கான மானிய உதவித் திட்டத்தில் இந்தியன் ஆயில் கார்பரேஷன், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத் துறை நிறுவனங்களுக்கு வருவாய் குறைந்து செலவுகள் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதேபோல, பொதுமக்களுக்கான மானிய உதவிகளை வழங்குவதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு சிலிண்டருக்கான மானியத் திட்டத்துக்கு மத்திய அரசு கூடுதலாக ரூ.30,000 கோடியை ஒதுக்கியுள்ளது.

மேலும் படிக்க...

துப்புரவு பணியாளரை காதலித்து கரம் பிடித்த பெண் டாக்டர்!

ராஜினாமா செய்பவர்களுக்கு 10% சம்பள உயர்வு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)